சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீர்: மீனுக்கு ஆபத்து

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீரால் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் இணையும் பாம்பனில் 300 க்கு மேலான விசை, நாட்டுப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலும் கடலோரத்தில் மீன் பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு, பவளப்பாறைகள் பொக்கிஷமாக திகழ்கிறது.மீன் வளத்தை பாதுகாக்க வேண்டிய

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீரால் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் இணையும் பாம்பனில் 300 க்கு மேலான விசை, நாட்டுப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலும் கடலோரத்தில் மீன் பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு, பவளப்பாறைகள் பொக்கிஷமாக திகழ்கிறது.மீன் வளத்தை பாதுகாக்க வேண்டிய மீனவர்கள், ஆபத்தையும் விளைவிக்கின்றனர்.பாம்பன் வடக்கு கடலோரத்தில் உள்ள ஏராளமான வீடுகளில் செப்டிக் டேங்க் இல்லாமல், ஊராட்சியின் மழைநீர் வாறுகாலில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.

இக்கழிவுநீர் பாம்பன் கடலில் கலந்து, கடல்நீர் மாசுபடிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடலோரத்தில் வாழும் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், எதிர்காலத்தில் மீனவர்களுக்கு மீன் வரத்து இன்றி எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் அவலம் உள்ளது.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X