சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு குழுவினர்அலட்சியம்: கலெக்டர் கண்டிப்பு

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினர் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். எஸ்.பி., கார்த்திக், டி.ஆர்.ஓ., சிவகாமி, கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினர் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். எஸ்.பி., கார்த்திக், டி.ஆர்.ஓ., சிவகாமி, கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க குழுவினர் ஒத்துழைக்க வேண்டும். அலட்சியமாக பெயரளவில் சிலரின் பணிஉள்ளது, இது கண்டித்தக்கது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பஸ்களில் ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும், தேவைப்பட்டால் டிரைவர், கண்டக்டர் 'லைசென்ஸ்' ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.சப்கலெக்டர் சுகபுத்ரா, கூடுதல் எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் பங்கேற்றனர்.------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X