பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட ஆர்வமில்லை

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லாத நிலையில், இதுவரை 56 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 200 பேருக்கும் மேல் அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மக்களிடையே அச்சம் நிலவுகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க இரு தடுப்பூசிகளை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லாத நிலையில், இதுவரை 56 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 200 பேருக்கும் மேல் அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மக்களிடையே அச்சம் நிலவுகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க இரு தடுப்பூசிகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இந்த தடுப்பூசிகளை போடுவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை பெறலாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற மருத்துவமனைகளில் இலவசமாக இரு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.

அதே நேரம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நிலையில் 56 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் முதல் டோஸ் ஊசி 54, 623 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1377 பேரும், என இதுவரை 56,000 பேர் முதல் டோஸ் ஊசி போட்டுள்ளனர். இவர்களில் அரசு மருத்துவமனைகளில் 13,867 பேரும், தனியாரில் 450 பேரும், என 14,317 பேர் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்.மாவட்ட மக்கள் தொகையில் கணக்கிட்டால் 100 பேரில் 3 பேர் தான் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X