பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பரபரப்பிலும் ஞாயிறு ஊரடங்கு

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பரபரப்பிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பால் ஏப்.,20 முதல் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கு

ராமநாதபுரம் : தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பரபரப்பிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக நடைபெற்றது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பால் ஏப்.,20 முதல் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கு நடைபெற்றது.நேற்று சட்டசபை தேர்தல் முடிவு வெளியான நிலையிலும், மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கட்சியினரும் எந்த வெற்றி ஆர்ப்பாட்டங்களையும் செய்யவில்லை.* பரமக்குடியில் கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து, அரசின் முழு ஊரடங்கால் நகர் வெறிச்சோடியது. பஸ் ஸ்டாண்ட் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து நேற்று சட்டசபை வாக்கு எண்ணிக்கை நாளாக இருந்தாலும், மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. மேலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் வீட்டிலேயே இருந்தனர்.பரமக்குடியில் 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., வேட்பாளர் முருகேசன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் சதன்பிரபாகரனை தோற்கடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X