மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி

Updated : மே 03, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோல்கட்டா : பா.ஜ.,வின் கடும் போட்டியை முறியடித்து, மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, 66, தலைமையிலான, திரிணமுல் காங்., தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள, 294 தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், வேட்பாளர்கள் உயிரிழந்ததால், இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.மற்ற, 292
மேற்கு வங்கம்,மீண்டும் மம்தா, பா.ஜ.,முறியடித்து, 'ஹாட்ரிக்'

கோல்கட்டா : பா.ஜ.,வின் கடும் போட்டியை முறியடித்து, மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, 66, தலைமையிலான, திரிணமுல் காங்., தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள, 294 தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், வேட்பாளர்கள் உயிரிழந்ததால், இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.மற்ற, 292 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அனைத்து கட்ட ஓட்டுப் பதிவின்போதும் வன்முறையை சந்தித்த நிலையில், மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்தது.


கடும் போட்டிதுவக்கம் முதலே, திரிணமுல் காங்., முன்னிலையில் இருந்தது. அதே நேரத்தில், பா.ஜ.,வும் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று, கடும் போட்டியை கொடுத்தது.முதல் சில கட்டங்களில், இரு கட்சிகளும் சம நிலையில் இருந்தன. அதன்பின், திரிணமுல் காங்.,கின் முன்னிலை தொடர்ந்து அதிகரித்தது.பெரும்பான்மைக்கு, 148 இடங்கள் தேவை என்ற நிலையில், 202 இடங்களில், திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்றது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 211 தொகுதிகளில் திரிணமுல் வென்றிருந்தது.


கடந்த சட்டசபை தேர்தலில், மூன்று இடங்களில் மட்டுமே வென்ற, பா.ஜ., இந்த தேர்தலில், 81 இடங்களை கைப்பற்றி, மாற்று சக்தியாக உருவெடுத்து உள்ளது.
சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, திரிணமுல் காங்.,கில் இருந்து, பல மூத்த தலைவர்கள் விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான அமித் ஷா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் பலரும், இங்கு பிரசாரம் செய்தனர்.இந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., ஆட்சி அமைத்தாலும், அதிக தொகுதிகளில் பா.ஜ., வென்றுள்ளது, முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.தொடர்ந்து, 34 ஆண்டு கள் ஆட்சியில் இருந்த, தங்கள் கோட்டை என்று கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்த முறை கோட்டை விட்டது.


latest tamil newslatest tamil newsபாராட்டுகடந்த தேர்தலில், 26 இடங்களில் வென்ற மார்க்சிஸ்ட், தற்போது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்.,கும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த தேர்தலில், காங்., 44 தொகுதிகளில் வென்றிருந்தது.பா.ஜ.,வின் கடும் சவாலுக்கு இடையே, மிகப் பெரிய வெற்றியை பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமுல் காங்கிரசுக்கு, பல்வேறு கட்சிகள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளன. பா.ஜ.,வின் தேசிய பொதுச் செயலர், கைலாஷ் விஜயவர்கியாவும், 'திரிணமுல் வென்றதற்கு மம்தா மட்டுமே காரணம்' என, வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில், திரிண முல் காங்.,குக்கு, 48.3 சதவீத ஓட்டுகளும், பா.ஜ., வுக்கு, 38.7 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன.


மம்தா தோல்வி
கடந்த, 2011ல், பவானிபுர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி, 2016ல், அதே தொகுதியில், 25 ஆயிரத்து, 301 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.இந்த தேர்தலின்போது, திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த, மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தன் தொகுதியான நந்திகிராமில், தன்னை எதிர்த்து போட்டியிடும்படி, மம்தாவுக்கு சவால் விடுத்தார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளைவிட, இந்த தொகுதிக்கான முடிவு, நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. துவக்கத்தில் இருந்தே, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அதிகாரி, இங்கு முன்னிலையில் இருந்தார்.

மாலையில், கடைசி சுற்றில் தான், மம்தா முன்னிலை பெற்றார்.இந்த தொகுதியில், மம்தா வென்றதாக, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், 8,700 ஓட்டுகள் வித்தியாசத்தில், மம்தா பின்னடைவில் உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இறுதியில்,
இந்த தொகுதியில், மம்தா தோல்வி அடைந்தார்.அதிகாரிக்கு, 62,677 ஓட்டுகளும், மம்தாவுக்கு 52,815 ஓட்டுகளும் கிடைத்தன. அதன்படி, 10 ஆயிரம் ஓட்டுகளில், மம்தா தோல்வியடைந்தார்.'நந்திகிராமில், தோல்வியை ஏற்கிறேன். ஆனால், இதில் சதி நடந்துள்ளது.இதை எதிர்த்து, கோர்ட்டுக்குச் செல்வேன்,'' என, மம்தா பானர்ஜி கூறினார்.


'மேற்கு வங்கத்துக்கான வெற்றி'தேர்தல் பிரசாரத்தின்போது, மார்ச், 10ம் தேதி நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மம்தா சென்றார். அப்போது தாக்கப்பட்டதாகவும், காலில் காயமேற்பட்டதாகவும் அவர் கூறினார். அதன்பின், காலில் கட்டுப் போட்டு, 'வீல்சேரில்' இருந்தபடியே, பிரசாரத்தில் ஈடுபட்டார்.நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காலில் கட்டு இல்லாமல், வீல்சேர் உதவி இல்லாமல், தன் வீட்டுக்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவை, மேற்கு வங்கம் காப்பாற்றியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.இரட்டை இன்ஜின் என்று கூறி, பா.ஜ., பொய் பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போதே, இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் கூறினேன்.இது, மேற்கு வங்கத்துக்கு கிடைத்துள்ள வெற்றி. இது உங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. மேற்கு வங்கத்தின் கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதே நம்முடைய முக்கிய பணி. இவ்வாறு அவர் கூறினார்.

தாக்கத்தை ஏற்படுத்தும்பா.ஜ.,வில் ஏற்பட்ட அதிருப்தியால், அதில் இருந்து விலகிய, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.
கட்சியின் துணைத் தலைவரான, அவர் கூறியதாவது:இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சி பொறுப்புகளில் இருந்து, தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா, மாநில தலைவர் திலிப் கோஷ் விலக வேண்டும்.
இந்த தேர்தல் முடிவு, உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதை புரிந்து, நரேந்திர மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


விலகினார் பிரசாந்த் கிஷோர்திரிணமுல் காங்., கட்சிக்காக, தேர்தல் பிரசார யுக்திகளை, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்தார். 'இந்தத் தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வென்றால், இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன்' என, அவர் சவால் விடுத்திருந்தார்.
நேற்று மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர் கூறியதாவது:இந்தத் தேர்தலில் திரிணமுல் காங்., மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது, எனக்கு நன்கு தெரியும். இந்த முடிவுகள், ஒரு பக்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக தோன்றும். ஆனால், உண்மையில் கடும் போட்டி நிலவியது.மேற்கு வங்கத்தில், பா.ஜ., மிகப் பெரும் சக்தியாக மாறியுள்ளது. பா.ஜ.,வுக்கு சாதகமாகவே, தேர்தல் கமிஷனும் செயல்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, இந்தத் தொழிலில் இருந்து விலகுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


குவிந்த வாழ்த்துக்கள்மேற்கு வங்கத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள திரிணமுல் காங்., தலைவர், மம்தா பானர்ஜிக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, செய்தி வெளியிட்டுள்ளனர்.


கொண்டாட தடைமுன்னணி நிலவரம் வெளிவரத் துவங்கியதும், திரிணமுல் காங்., தொண்டர்கள், சாலைகளில் குவிந்து, பட்டாசுகள் வெடித்தும், வண்ணப் பொடிகளைத் துாவியும், 'டிரம்ஸ்' வாசித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா விதிகள் மீறப்பட்டதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநில நிர்வாகம் மற்றும் போலீசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டோரை விரட்டியடித்தனர். பல இடங்களில், போலீசாருடன், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மம்தாவுக்கு பா.ஜ., வாழ்த்துபா.ஜ., தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா கூறியதாவது:
இந்த தேர்தலில், திரிணமுல் காங்., வென்றதற்கு, மம்தா பானர்ஜியே காரணம். மேற்கு வங்க மக்கள், மம்தா பானர்ஜியை தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்தத் தேர்தலில், பா.ஜ.,வின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்படும். எங்கு தவறு நடந்தது, கட்சி கட்டமைப்பில் பிரச்னையா என்பது குறித்து ஆராயப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
03-மே-202118:49:00 IST Report Abuse
Ellamman இந்த வெற்றி மாபெரும் வெற்றி... 23 முறை மோடி-அமித் ஜோடி அங்கு பிரச்சாரம் செய்தார்கள்... மத்திய அமைச்சர்கள் அனைவரையும் அங்கு இறக்கி விட்டார்கள்.... பீசப்பி மாநில முதல்வர்கள் அங்கு முகாமிட்டார்கள்...கூட வருமானவரித்துறை... சி பி ஐ...அமுலாக்கத்துறை....இவர்களும் பீசபைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் கொடுத்தார்கள்... தேர்தல் கமிஷன் மோடி ஆட்டுவித்தபடி ஆடியது..... என்ன செய்து என்ன பயன்.. ஒற்றை பெண்மையாக இரும்பு பெண்மையாக மோடி- அமித் விழிகளில் விரலை விட்டு ஆட்டிய வெற்றி மங்கை...
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) மம்தா அவரால் தேசிய அரசியலிலும் ஜெயிக்க முடியும். அவர் பிஜேபியை எதிர்த்து தேசிய அரசியலுக்கு வரவேண்டும். நாட்டின் அடுத்த பெண் பிரதமர் மம்தா.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) துரோகிகள் பலரும் தோற்றனர் அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X