கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியை தக்க வைத்தார் பினராயி

Updated : மே 03, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்கேரள அரசியலில் இதுவரை இல்லாத விதமாக ஆளும் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. கேரள அரசியல் வரலாற்றில் எந்த ஆளும் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததே இல்லை. கடந்த 1982ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான
கேரளா, இடதுசாரிகள்,சாதனை:ஆட்சி, பினராயி

திருவனந்தபுரம்கேரள அரசியலில் இதுவரை இல்லாத விதமாக ஆளும் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. கேரள அரசியல் வரலாற்றில் எந்த ஆளும் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததே இல்லை.


latest tamil news


கடந்த 1982ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன. கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங். கூட்டணி தோல்வியடைந்தது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்றார்.


latest tamil news



கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19ல் காங்கிரஸ் கூட்டணியும் இடது ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. அதனால் சட்டசபை தேர்தலில் வழக்கம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கேரள சட்டசபைக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. 74 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. துவக்கம் முதலே இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.



latest tamil news


முடிவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைத்தது.கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த ஆளும் கட்சி என்ற வரலாற்று சாதனையை இடது ஜனநாயக முன்னணி படைத்தது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தர்மாடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கண்ணுார் மாட்டம் மேட்டனுார் தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் காங்கிரசை சேர்ந்த உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் 9000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2016ல் நடந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 91 இடங்களிலும் காங். கூட்டணி 47 இடங்களிலும் பா.ஜ. மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.


உரப்பாணு எல்.டி.எப்.



உரப்பாணு எல்.டி.எப். எனப்படும் எல்.டி.எப். தான் உறுதி என்பது தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியில் தேர்தல் கோஷமாக இருந்தது. முதல்வர் பினராயி விஜயன் தான் இந்த கோஷத்தை அறிமுகம் செய்தார். இப்போது இந்த கோஷத்தை மக்கள் உறுதி செய்து
விட்டனர்.


latest tamil news





'கொண்டாடுவதற்கான நேரமல்ல'



இடது ஜனநாயக முன்னணிக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ள மக்களுக்கு நன்றி; இது வெற்றியை கொண்டாடும் நேரமல்ல; கொரோனா வுக்கு எதிராக போராட வேண்டிய நேரம்.
பினராயி விஜயன், முதல்வர் மார்க்சிஸ்ட்

இந்த தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பேன். இதற்கு முன்னும் காங்கிரஸ் இதுபோல் தோற்று உள்ளது; பின் வலிமையாக எழுந்துள்ளது.உம்மன் சாண்டி முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

பெருந்தொற்று உள்ளிட்ட மக்கள் சந்தித்த பல்வேறு சவால்களை சிறப்பாக கையாண்ட மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்த கேரள மக்களுக்கு நன்றி. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகத்துக்கே முன்மாதிரியாக கேரளா உள்ளது.சீதாராம் யெச்சூரி, பொதுச் செயலர், மார்க்சிஸ்ட்




வலிமையான தலைமை இல்லை





சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் குற்றச்சாட்டு ஆகியவை, இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு எதிராக இருந்தும், காங்கிரஸ் கூட்டணியால், ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
'தென் மாநிலங்களில், பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் சக்தியாக, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியை முன்னிலைப்படுத்த வேண்டும்' என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுலின் எண்ணமும், நிறைவேறவில்லை.
இதற்கு, 'காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு, வலிமையான தலைமை இல்லாததே காரணம்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, கேரளாவில், காங்கிரஸ் தலைமைக்கு எதிரான குரல்கள், அதிகரிக்க துவங்கிவிட்டன.


வெற்றிக்கு உதவிய பா.ஜ.,



கேரளாவில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெற்று வந்தது. இந்த முறை, அந்த நடைமுறை மாறிவிட்டது.
இந்த தேர்தலில், முன் எப்போதும் இல்லாத அளவில், பா.ஜ., தீவிரமாக பிரசாரம் செய்தது. 'பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் நோக்கில், காங்., கூட்டணிக்கு ஓட்டுப் போடாமல், இடதுசாரி கூட்டணிக்கு சிபான்மை மக்கள் ஓட்டளித்துள்ளனர்' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.


கேரள காங்கிரசால் லாபம்



சட்டசபைக்கு தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன், ஜோஸ் மாணி தலைமையிலான, கேரள காங்கிரஸ் - எம் - கட்சி, இடது ஜனநாயக முன்னணியில் சேர்ந்தது. கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த கட்சிக்கு, நல்ல செல்வாக்கு உள்ளது. இதுவும், இடது ஜனநாயக முன்னணியின் வெற்றிக்கு உதவியுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
03-மே-202118:03:44 IST Report Abuse
sankar தலைக்கு மேல் தங்கம் தொங்குகிறது -
Rate this:
Cancel
03-மே-202114:02:58 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ சொப்னசுந்தரி 😉😉விரைவில் விடுதலையா?
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
03-மே-202108:40:20 IST Report Abuse
கைப்புள்ள எனதருமை தமிழ் மக்களே, இப்படி பண்ணிட்டீங்களே என் தமிழ் மக்களே. சரி, நான் ஆந்திரா வந்து சேர்ந்து விட்டேன். முறுக்கு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X