அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை தெற்கில் போராடி வென்ற பா.ஜ.,

Updated : மே 03, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
கோவை : கோவை தெற்கு தொகுதியில், கமல் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கடைசி மூன்று சுற்று, தபால் ஓட்டிலும் கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி வெற்றி பெற்றார். 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில், கமல் தோல்வி அடைந்தார்.கோவை தெற்கு தொகுதியில், முதல் சுற்றில் இருந்தே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், முன்னணியில் இருந்தார். காங்., மாநில நிர்வாகி, 'மயூரா' ஜெயகுமார்
'டி - 20', மிஞ்சிய,  கமல் தோல்வி!

கோவை : கோவை தெற்கு தொகுதியில், கமல் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கடைசி மூன்று சுற்று, தபால் ஓட்டிலும் கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி வெற்றி பெற்றார். 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில், கமல் தோல்வி அடைந்தார்.கோவை தெற்கு தொகுதியில், முதல் சுற்றில் இருந்தே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், முன்னணியில் இருந்தார். காங்., மாநில நிர்வாகி, 'மயூரா' ஜெயகுமார் இரண்டாமிடத்திலும்; பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாமிடத்திலும் இருந்தனர்.மெல்ல மெல்ல வானதி முன்னேற ஆரம்பித்தார். கமலுக்கும், வானதிக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசமும் மிகவும் குறைவாகவே இருந்தால், மக்கள் நீதி மய்யத்தினர் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.கமல், 14வது சுற்றில், 27,589 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
வானதியோ, 26,400 ஓட்டுகள் பெற்று, துரத்தினார். இருவருக்கும் இடையே வித்தியாசம் 1,189 ஓட்டுகளே. 15வது சுற்றில், 1,247 ஓட்டுகளாகவும், 16வது சுற்றில், 1,114 ஓட்டுகளும் என வித்தியாசம் குறைந்தது.மொத்தம், 26 சுற்றுகள் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ண வேண்டிய நிலை இருந்ததால், இரு கட்சியினரும் திக்...திக்... மனநிலையில் காணப்பட்டனர். 21வது சுற்றில் இருந்து போட்டி மிகவும் கடுமையாக காணப்பட்டது. 21வது சுற்றில், 979, 22வது சுற்றில், 176 என, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் கமல் முன்னிலை பெற்றிருந்தார்.பின், 23வது சுற்றில், 890 ஓட்டுகள் அதிகமாக பெற்று, 45,932 ஓட்டுகளுடன், பா.ஜ., வானதி முன்னிலை பெற்றார். 45,042 ஓட்டுகளுடன், கமல் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். 24வது சுற்றில், 48,270 ஓட்டுகள் பெற்று, 1,614 ஓட்டுகள் வித்தியாசத்தில் வானதி முன்னிலையை தொடர்ந்தார்.கடைசி மூன்று சுற்றிலும், தபால் ஓட்டிலும் அதிக ஓட்டுகள் பெற்றதால், 26வது சுற்றில், 53,209 ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி சீனிவாசன், 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ம.நீ.ம., தலைவர் கமல், 51,481 ஓட்டுகள் பெற்று, தோல்வி அடைந்தார்.
ஒவ்வொரு தொகுதி யிலும், 'விவிபேட்' இயந்திரங்களை, குலுக்கல் முறையில், ஐந்து 'பூத்' பெட்டிகள் தேர்வு செய்து, ரசீதுகளை எண்ணி, இயந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கையோடு ஒப்பிட தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது.இதன்படி, ஐந்து இயந்திரங்களில் உள்ள ரசீதுகளை எண்ண, ஒரு மணி நேரம் ஆகும் என, தேர்தல் பிரிவினர் கூறினர். அதன்பிறகே அதிகாரப் பூர்வமாக அறிவித்து, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தோல்வி உறுதி என தெரிந்ததால், கமல் புறப்பட்டுச் சென்றார்.


வெறுப்பில் கிளம்பிய கமல்


ஓட்டு எண்ணிக்கையை பார்க்க, நேற்று காலை, 9:30 மணிக்கு ஜி.சி.டி., கல்லுாரிக்கு கமல் வந்தார். சிறிது நேரம் ஓட்டு எண்ணிக்கையை பார்த்து, கிளம்பிச் சென்றார்.பின், மாலை, 6:30க்கு மீண்டும் வந்த அவர், ஓட்டு எண்ணும் அறையில், பா.ஜ., வேட்பாளர் வானதிக்கு அருகில் அமர்ந்து, கையில் பேப்பர், பேனாவுடன் சுற்று வாரியாக பெற்ற ஓட்டுகளை குறிப்பு எடுத்தார்.தபால் ஓட்டு, கடைசி மூன்று சுற்று சேர்த்து, 1,728 ஓட்டு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டான அவர், சோகத்துடன் கிளம்பிச் சென்றார்.


:'டி -20' போட்டியை மிஞ்சும் பரபரப்பு


:'டி -20' போட்டியை மிஞ்சும் அளவுக்கு, நடிகர் கமல் போட்டியிட்ட, கோவை தெற்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கை பரபரப்பை கூட்டியது.

இறுதியில் குறைவான ஓட்டுக்களில், கமல் தோல்வியை தழுவியது, ம.நீ.ம., கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக, தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. ஆனால், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், கடைசி வரை எதிர்தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த கமல், பின்னர் குறைந்த பட்ச எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். 26வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பின்னடைவில் இருந்த கமல், அடுத்த இரண்டு சுற்றுகளில் முனனிலை பெற்றார்.ஆனால், இறுதி கட்டத்தில், 1,628 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு பேசப்பட்ட கமல், கடைசியில் அவர் போட்டியிட்ட தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனார்.\

இது குறித்து, ம.நீ.ம., கட்சியினர் கூறியதாவது: திராவிட கட்சிகளை கூட திருத்தி விடலாம். ஆனால், தமிழக மக்களை திருத்த வேண்டும் என்றால், நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஜாதி ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு போனது ஆச்சர்யமாக உள்ளது. ஆனாலும், ம.நீ.ம.,வை பொறுத்தவரை, இது முன்னேற்றத்திற்கான பாதையே.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
04-மே-202103:25:03 IST Report Abuse
spr "திராவிட கட்சிகளை கூட திருத்தி விடலாம். ஆனால், தமிழக மக்களை திருத்த வேண்டும் என்றால், நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஜாதி ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு போனது ஆச்சர்யமாக உள்ளது." இதுதான் யதார்த்தம் ஆனால் கமலுக்கு இது ஒரு வரப்பிரசாதம் வெற்றி பெற்றால் அவரால் திமுகவுடனும் சேர முடியாது அஇஅதிமுகவுடனும் சேர முடியாது தனியே உட்கார வேண்டியிருக்கும் இப்பொழுது அவர் தைரியமாக ஆளும் கட்சி சரியில்லை நாங்க மட்டும் ஜெயிச்சுருந்தா அப்படியே தமிழகத்தைப் புரட்டிப் போட்டிருப்போம் என்று சொல்லலாம் நம்ப சில முட்டாள்கள் இருப்பார்கள் தமிழகத்தை பொறுத்தவரை இப்பொழுது வென்ற கட்சிகளைத்தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் அதிலும் டெபாசிட்டே பெறாதவர்களை குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போட்டியதாக கூடாது என்று தடை செய்ய வேண்டும் கமல் முதலில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற உழைக்கட்டும் 125 கோடி சொத்தில் ஒரு கொடியாவது கொரோனா மருந்துக்காக மக்களுக்கு இலவச தடுப்பூசி போடாக கொடுக்கலாம்
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் அருமை ஐந்து ரூபாய் டாக்டர் வேண்டும் செய்தி சொல்லும் இருநூறு ரூபாய் டிக்கெட் வாங்கிய விஜய் போன்ற ஆட்சி கனவில் இருப்பவர்கள் கமலின் தொல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ளட்டும் . எம் ஜீ ஆர் காலத்து நினைப்பில் ஆசையில் இளைஞர்களை தூண்டி விட வேண்டாம் .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
04-மே-202100:15:26 IST Report Abuse
Mohan நீ ஜெயிக்க கூடாதுன்னு சொல்லல ஜெயிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தான் சொல்றேன். படத்துல அரசியல் எடுபடும், அரசியலில் குத்தாட்டம் எடுபடாது ஆண்டவரே. ஆண்டவனை மறுப்பவனுக்கு பேரு ஆண்டவராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X