சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீணாகும் ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

Added : மே 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் ஆயிரம் ஏக்கர் விளை நிலம் தரிசாக மாறியதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வொன்றியத்தில் மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை, வடவன்பட்டி மாம்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு போக நெல் சாகுபடி செய்துள்ளனர்.தென்னை, வாழை, கடலை
 வீணாகும் ஆயிரம் ஏக்கர் விளைநிலம்  கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் ஆயிரம் ஏக்கர் விளை நிலம் தரிசாக மாறியதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இவ்வொன்றியத்தில் மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை, வடவன்பட்டி மாம்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு போக நெல் சாகுபடி செய்துள்ளனர்.தென்னை, வாழை, கடலை பயிரிடப்பட்டன. மழை குறைவு, நிலத்தடி நீர் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து விவசாயம் பொய்த்து விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டுள்ளனர். சிலர் வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர். வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உழவு பணி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழை, மணிமுத்தாற்றில் வந்த தண்ணீர் காரணமாக சில கண்மாய்கள் நிரம்பின. ஆனாலும் பாசனக் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் மண்மூடி கிடப்பதாலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு நிலத்தை உழுது பண்படுத்த முடியாததாலும் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டனர். ஒரு காலத்தில் இருபோக சாகுபடி நடந்த இப்பகுதியில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் நடைபெறவில்லை. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை வேளாண் துறை அதிகாரிகளை களத்தில் இறக்கி இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இப்படியொரு சாதனை நடந்துள்ளதை இத்தனை ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்தது ஏனுங்க இபோது திடீர் ஞானோதயம் பெற்றது அந்த சீமை மரத்தடியிலா?
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
03-மே-202120:10:59 IST Report Abuse
Amirthalingam Shanmugam 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு போக நெல் சாகுபடி செய்துள்ளனர்.தென்னை, வாழை, கடலை பயிரிடப்பட்டன. மழை குறைவு, நிலத்தடி நீர் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து விவசாயம் பொய்த்து விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டுள்ளனர். ஆயிரம் ஏக்கர் ? எல்லா விவசாயிகளும் சேர்ந்து ஒரு முயற்சியும் எடுக்கவில்லையா? விவசாயம்தான் இந்நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டுயிருந்ததெல்லாம் ......? தொலைநோக்கு திட்டங்கள் இல்லாததே காரணம்.
Rate this:
A P - chennai,இந்தியா
07-மே-202113:27:15 IST Report Abuse
A Pஎதற்கெடுத்தாலும் போராட்டம், அடிதடி என்று சொல்லிக் கெடுத்த அரசியலில் உள்ள நன்றியுடைய ப்ராணிகள்தான் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம். தண்ணீர் வருகிற ஓடைகளை அடைத்த கறை படிந்த வேட்டியணிந்த கொள்ளைக் காரன்களைத்தான் கேட்க வேண்டும். தவறான வழிகளைத் தமிழக மக்களுக்குக் காட்டி குட்டிச் சுவராக்கிய அரசியல்வாதிகள் படு நாசமாகப் போகவேண்டும் என நான் வணங்கும் இறைவனை தாள் பணிந்து வேண்டுகிறேன்....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-மே-202119:13:53 IST Report Abuse
r.sundaram பாசன கால்வாய்கள் இருந்த இடம் தெரிய வில்லை, காரணம் யார்? இதில் விவசாயிகளுக்கும்பங்கு உண்டா இல்லையா? ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாம்? ஏன்? காலம் கடந்தபின் வருந்தி எதற்கு? இனிமேலாவது நேர்வழியில், தகுந்த ஆட்களை பார்த்து பாசன கால்வாய்களை கண்டுபிடித்து பாசனம் செய்ய பழகுங்கள். அரசும் இதற்க்கு உதவ வேண்டும். ஆனால் தற்போதைய அரசை நினைத்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X