சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் வாரச்சந்தைகளுக்கு தடை

Added : மே 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால்,கொரோனா பரவலை தடுக்க மறு உத்தரவு வரும் வரை சிவகங்கை மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தடையையும் மீறி பொதுமக்கள் வாரச்சந்தைகளில் கூட்டமாக கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ்

சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால்,கொரோனா பரவலை தடுக்க மறு உத்தரவு வரும் வரை சிவகங்கை மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தடையையும் மீறி பொதுமக்கள் வாரச்சந்தைகளில் கூட்டமாக கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இறைச்சி கடைகள், சந்தைகள், பெரிய மால்கள், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், கடந்த புதனன்று சிவகங்கையில் தடையை மீறி வாரச் சந்தை நடந்தது. பெரும்பாலான மக்கள் கூட்டமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக மாவட்ட அளவில் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதியில் நடக்கும் அனைத்து வார சந்தை கடைகளை மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யுமாறு கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அனைத்து நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை வாரச்சந்தை எங்கும் நடைபெறாது என அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அறிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X