சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Added : மே 02, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதானதால் முகவர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காரைக்குடி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்றின் போது,7வது மேஜையில் இருந்த ஓட்டுப் பதிவு

காரைக்குடி : காரைக்குடியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதானதால் முகவர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காரைக்குடி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்றின் போது,7வது மேஜையில் இருந்த ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதானது. ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.ஓட்டு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் சரி செய்தனர். ஓட்டு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதமாக நடந்ததால் அங்கிருந்த முகவர் களுக்கும்,அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கட்சி முகவர்கள்,பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. உணவு பொட்டலங்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் வழங்கப் பட்டது. கல்லுாரி வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் சூழ்ந்திருந்தது. காரைக்குடி, திருப்புத்துார் தொதிகளுக்கான ஓட்டும் எண்ணும் மையத்திற்குள் நேற்று காலை பத்திரிகையாளர்கள் செல்ல முற்பட்டனர். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்து விட்டனர். இது குறித்து பத்திரிகையாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து புகார் தெரிவித்தனர். ஓட்டு எண்ணிக்கை வெளிப்படையாகவும், நேர்மையுடனும் நடக்க அதிகாரிகள் முன் வரவில்லை.

இதனால், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியாமல் தவித்தனர்.விரட்டியடிப்புதிருப்புத்துாரில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை தடை செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டது. குறிப்பாக அண்ணாத்துரை, காந்தி சிலை, நான்கு ரோடு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். வெடி வெடிக்க வந்த சிலரை அப்புறப்படுத்தினர். ஊரடங்குடன் அதிகரிக்கப் பட்ட போலீசாலும் தேர்தல் கொண்டாட்டம் இன்றி யாருடைய நடமாட்டமும் இன்றி முக்கிய ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X