தமிழ்நாடு

சிக்கல்! சிவகங்கையில் கொரோனா சிகிச்சை அளிப்பதில்.... உயிரிழப்பு அச்சத்தை போக்குமா நிர்வாகம்

Added : மே 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் 2020 ஏப்ரலில் தொடங்கிய கொரோனா பரவல், சில மாத தொய்விற்கு பின் 2021 ஏப்ரலில் மீண்டும் தலை

சிவகங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் 2020 ஏப்ரலில் தொடங்கிய கொரோனா பரவல், சில மாத தொய்விற்கு பின் 2021 ஏப்ரலில் மீண்டும் தலை துாக்க தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டில் 8677 பேருக்கு கொரோனா உறுதியானதில், 7817 பேர் குணமாகினர். தற்போது 727 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது வரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.* இணை நோயால் உயிரிழப்பு அச்சம்:இது தவிர சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொரோனா உறுதியுடன் சிகிச்சைக்கு வருவோரில், பெரும்பாலானவர்கள் உரிய சிகிச்சை பெற்று பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என வந்தும், நுரையீரல் பாதிப்பு, இருதய அடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணத்தால் உயிரிழக்கின்றனர்.

கடந்த வாரத்தில் தினமும் 5 முதல் 7 பேர் வரை இப்பிரச்னையால் உயிரிழந்துள்ளனர். இது சிவகங்கை மக்களிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.* மருத்துவமனை ஒத்துழைப்பு தேவை:மருத்துவம்,சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‛கொரோனா'விற்கு சிகிச்சை அளிக்கின்றனர். இங்கு பணிபுரியும் டாக்டர்கள் சிலர் ‛ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. லேசான மூச்சு திணறல் வந்தால் கூட பாதுகாப்பு கருதி சிவகங்கைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனாலேயே இங்கு 400 பேர் வரை சிகிச்சையில் உள்ளனர்.அதிக பாதிப்பு உள்ள நோயாளிகளை மட்டுமே சிவகங்கைக்கு அனுப்பினால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமடைய செய்யலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போன்று மினி கிளினிக்-குகளில் உள்ள 36 டாக்டர்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.* பயிற்சி டாக்டர்களின்றி சிக்கல்:எதற்கெடுத்தாலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்காமல், சிவகங்கைக்கு அனுப்புவதால் போதிய படுக்கை, ஆக்சிஜன் வசதிகளை செய்ய முடியாமல் திணறுகின்றனர். இங்கு தற்போது 56 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். கடந்த ஆண்டாவது பயிற்சி டாக்டர்கள் 100 பேர் இருந்தது, உதவியாக இருந்தது. இந்த ஆண்டு பயிற்சி டாக்டர்களும் இல்லை. இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலில் இருந்து சிவகங்கை மக்களை பாதுகாக்க சுகாதாரம், மாவட்ட மருத்துவம், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் இணைந்து செயல்படுவதை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி உறுதி செய்ய வேண்டும்.===

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X