அரசியல் செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் மீண்டும் கோட்டையை பிடித்த தி.மு.க.,

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார் : குன்னுாரில் கடந்த முறை நழுவ விட்ட கோட்டையை, தி.மு.க., மீண்டும் கைப்பற்றியது. நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 937 ஓட்டுக்கள் பதிவாகின.ஓட்டு எண்ணிக்கையில், 20 சுற்றுக்களில், 11 சுற்று வரை அ.தி.மு.க., முன்னிலை வகித்தது. தொடர்ந்து, தி.மு.க., முன்னேறியது. அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும்

குன்னுார் : குன்னுாரில் கடந்த முறை நழுவ விட்ட கோட்டையை, தி.மு.க., மீண்டும் கைப்பற்றியது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 937 ஓட்டுக்கள் பதிவாகின.ஓட்டு எண்ணிக்கையில், 20 சுற்றுக்களில், 11 சுற்று வரை அ.தி.மு.க., முன்னிலை வகித்தது. தொடர்ந்து, தி.மு.க., முன்னேறியது. அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முன்னாள் அமைச்சரான தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன், 61 ஆயிரத்து 820 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.குன்னுாரில் புதியவராக களம் இறங்கிய அ.தி.மு.க., வேட்பாளர் வினோத், 57 ஆயிரத்து 715 ஓட்டுக்கள் பெற்றார்.

மூன்றாம் இடம் பிடித்த, நாம் தமிழர் வேட்பாளர் லாவண்யா, 7,252 ஓட்டுக்கள் பெற்றதும், தி.மு.க.,வுக்கு 1,349 தபால் ஓட்டுக்கள் கிடைத்ததும், அ.தி.மு.க.,வின் சரிவுக்கு முக்கிய காரணம்.கடந்த, 1971ல் இருந்து, 2016 வரை நடந்த 11 தேர்தல்களில், குன்னுார் தொகுதியில், அ.தி.மு.க., மூன்று முறையும், தி.மு.க., ஏழு முறையும் த.மா.க., ஒரு முறையும், வெற்றி பெற்றுள்ளன. தற்போது தி.மு.க., தனது கோட்டையை மீண்டும் பிடித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
03-மே-202114:08:09 IST Report Abuse
Siva மக்கள் தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். திமுக தலைமையும் சரியான வேட்பாளரை தேர்வு செய்தது... குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைதியானவர்... தகுதியானவர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X