பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை சினிமா செய்திகள்

Added : மே 02, 2021
Share
Advertisement
ஐந்து மொழிகளில் நடிகர் சூரி படம்!வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'துணைவன்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி வரும் இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூரி.விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். விடுதலை படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என, ஐந்து மொழிகளில்

ஐந்து மொழிகளில் நடிகர் சூரி படம்!வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'துணைவன்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி வரும் இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூரி.விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். விடுதலை படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என, ஐந்து மொழிகளில் வெளியிடவும், படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் - -தனுஷ் கூட்டணியில் உருவான, நான்கு படங்களுக்கும் கிடைக்காத, பான் இந்தியா பட அங்கீகாரம் சூரி படத்திற்கு கிடைக்கப் போகிறது.'அடங்கமறு' இயக்குனருடன் இணையும் விஷால்!இரும்புத்திரைக்கு பின், வரிசையாக விஷால் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது, ஆனந்த் சங்கர் இயக்கத்தில், எனிமி என்ற படத்தில், ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே ஆகியோர், நாயகியராக நடித்துள்ளனர்.இதையடுத்து, ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படத்தை இயக்கிய, கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில் நடிக்கிறார், விஷால். ஆக் ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். தற்போது, விஷால் நடித்து வரும் எனிமி படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில், ஜூன் முதல் நடிக்கப் போகிறார்.அஜித்தை இயக்க தயாராகும் சுதா!இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கிய சுதா, அடுத்தபடியாக அஜித்திற்கு ஒரு கதை சொல்லி காத்திருக்கிறார். ஆனால், வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், மூன்றாவது முறையாகவும் வினோத் -- போனி கபூர் கூட்டணியில், ஒரு படத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், வலிமைக்கு பின், சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. காரணம், ஏற்கனவே அஜித்தை சந்தித்து கதை சொல்லி வந்த சுதா, சமீபத்தில் மீண்டும் ஒருமுறை, அஜித்துடன் சந்திப்பு நடத்தியிருப்பதாக தகவல்.சமந்தா இல்லாமல் 'சகுந்தலம்' படப்பிடிப்பு!கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஐதராபாதில் நடந்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள், ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன. ஆனாலும், தெலுங்கானாவில், படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அங்கு, சில படப்பிடிப்புகள் நடக்கின்றன. அந்த வகையில், சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும், 6 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடக்கிறது.சமீபத்தில், தன், 34ம் பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, கொரோனா அலை காரணமாக, சகுந்தலம் படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதனால், மற்ற நடிகர் - -நடிகையரை வைத்து, தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார், இயக்குனர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும், ஐதராபாதில் நடக்கிறது.அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்!கொரோனாவின், இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, நடிகை ஸ்ருதி ஹாசன், 'இன்ஸ்டா'வில் பதிவிட்டுள்ளதாவது:உலகம் குழப்பத்தில் உள்ளது. ஒட்டுமொத்த மனித இதயமும் வேதனையில் இருக்கிறது. உங்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கும், பிரகாசிப்பதற்கும், அன்பை பரப்புவதற்கும், கடினமாக உழைக்க, இது தான் சிறந்த நேரம். செயலற்ற, ஆக்கிரமிப்பு நடத்தைகள், மறுப்புகள் மீண்டும் மீண்டும் அழிக்கும் வடிவங்கள். அவற்றிற்கு எப்போதும் உதவாதீர்கள். நல்ல சிந்தனை செய்யுங்கள், நல்லவற்றிற்காக நல்லதாக இருங்கள், உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி, மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X