அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார் வேலுமணி

Added : மே 02, 2021
Share
Advertisement
கோவை, : தொண்டாமுத்துார் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வேலுமணி, 41,630 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழக அமைச்சரவையில், செல்வாக்குடன் இருந்தவர் வேலுமணி. அவரை இந்த முறை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து வித அஸ்திரங்களையும் தி.மு.க., பயன்படுத்தியது.முந்தைய தேர்தலை போல் அல்லாமல், இந்த முறை தி.மு.க., வேட்பாளரே களம் இறக்கப்பட்டார்.

கோவை, : தொண்டாமுத்துார் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வேலுமணி, 41,630 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழக அமைச்சரவையில், செல்வாக்குடன் இருந்தவர் வேலுமணி. அவரை இந்த முறை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து வித அஸ்திரங்களையும் தி.மு.க., பயன்படுத்தியது.முந்தைய தேர்தலை போல் அல்லாமல், இந்த முறை தி.மு.க., வேட்பாளரே களம் இறக்கப்பட்டார். அதுவும் உள்ளூர் வேட்பாளர் அல்லாமல், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலம் அடைந்த கார்த்திகேய சிவசேனாபதியை, காங்கேயத்தில் இருந்து வரவழைத்து தொண்டாமுத்துாரில் நிற்க வைத்தனர். அமைச்சர் வேலுமணிக்கு, கார்த்திகேய சிவசேனாபதி, சரியான போட்டியை ஏற்படுத்தி விட்டதாக, அரசியல் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.

ஆனால் நேற்றைய தேர்தல் முடிவின்படி, கார்த்திகேய சிவசேனாபதியை அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து, நான்காம் முறையாக வெற்றிக் கொடி நாட்டி விட்டார் வேலுமணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X