அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் அ.தி.மு.க., அமோக வெற்றிக்கு காரணம் என்ன?

Added : மே 02, 2021
Share
Advertisement
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, அ.தி.மு.க., சாதனை படைத்துள்ளது.இந்த அமோக வெற்றிக்குக் காரணமென்ன என்ற விவாதம், அரசியல் கட்சியினரிடம் மட்டுமின்றி, பொது மக்களிடமும் நடந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சிப் பணிகளை, ஐந்தாண்டுகளில் செய்ததுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் என்று அ.தி.மு.க.,வினர் அடித்துக்

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, அ.தி.மு.க., சாதனை படைத்துள்ளது.இந்த அமோக வெற்றிக்குக் காரணமென்ன என்ற விவாதம், அரசியல் கட்சியினரிடம் மட்டுமின்றி, பொது மக்களிடமும் நடந்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சிப் பணிகளை, ஐந்தாண்டுகளில் செய்ததுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் என்று அ.தி.மு.க.,வினர் அடித்துக் கூறுகின்றனர்.கல்வி, தொழில், பொருளாதாரத்தில் சுயமாக வளர்ந்த கோவை மாவட்டம், கட்டமைப்பு வசதிகளை மட்டுமே அரசிடம் எதிர்பார்த்தது. ஆனால் அரசியலில் முக்கியத்துவம் பெறாத காரணத்தால், வளர்ச்சித் திட்டங்களில் இந்த மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், கடந்த2011ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தனது அமைச்சரவையில்முக்கியத்துறைகள் அனைத்தையும் கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்குக் கொடுத்தார்.

கடந்த 2016 தேர்தலிலும், அதே கவுரவத்தை அளித்தார். அவர் மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் கொங்கு மண்டலம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சேலத்தைச் சேர்ந்த பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரம், டாஸ்மாக், பள்ளிக் கல்வித்துறை, போக்குவரத்துத்துறை என முக்கியத்துறைகள் அனைத்தும் கொங்கு சமுதாயத்தினரிடம் இருந்தது. அதன்பின், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் எக்கச்சக்கமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. குறிப்பாக, பாலங்கள், சாலை விரிவாக்கம் என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப் பட்டன.குறிப்பாக, கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் மேம்பாடு, மாதிரிச்சாலை, புதிய பாலங்கள், சாலை விரிவாக்கம் என எட்டுத்திக்கிலும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பணிகளுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றே அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, களத்தில் அமைச்சர் முதல் அடிமட்டத் தொண்டன் வரை அதிதீவிரமாகப் பணி செய்ததும் மிக முக்கியக் காரணமென்கின்றனர்.இதை மறுக்கும் தி.மு.க., நிர்வாகிகள், 'முதல் காரணம், ஓட்டுக்குப் பணம் கொடுத்ததுதான். கோவை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அதிகாரிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே நடந்து கொண்டனர். பணப்பட்டுவாடா எந்தவொரு தடையுமின்றி நடந்தது. அத்துடன் எல்லாக் கட்சிகளிலும் உள்ள கொங்கு சமுதாய மக்கள், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓட்டுப்போட்டதும் முக்கியக் காரணம்' என்கின்றனர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 21 தொகுதிகளுக்கு அமைச்சர் வேலுமணி பொறுப்பேற்றிருந்தார். அவற்றில், 16 தொகுதிகளை வென்று, தேர்தல் பணிகளில் தன்னுடைய தனித்திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.தி.மு.க.,வில் உட்பூசல்தி.மு.க.,வுக்காகப் பணியாற்றிய ஆலோசனை நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தபோது, 'வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் அதிகமாகவுள்ளது. பதவியிருந்தால்தான், சீட் கிடைத்தால்தான் கட்சிக்கு வேலை பார்ப்பது, இல்லாவிட்டால் சொந்தக்கட்சி வேட்பாளரையே தோற்கடிப்பது என்ற மோசமான கலாசாரத்தை இங்கு மட்டும்தான் பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் பலர் வேலை பார்க்காமல் ஒதுங்கியுள்ளனர். அல்லது உள்ளடி வேலை பார்த்துள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X