அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை! மீண்டும் நிரூபித்தது அ.தி.மு.க.,

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : மேற்கு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி, கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என்பதை அ.தி.மு.க., நிரூபித்துள்ளது. கொங்கு மண்டலம், எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்து வந்தது. ஜெயலலிதா காலத்திலும் கூட இதே நிலையே நீடித்தது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வை அதீதீவிரமாக ஆதரிக்கும் மாவட்டமாக

கோவை : மேற்கு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி, கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என்பதை அ.தி.மு.க., நிரூபித்துள்ளது.

கொங்கு மண்டலம், எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்து வந்தது. ஜெயலலிதா காலத்திலும் கூட இதே நிலையே நீடித்தது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வை அதீதீவிரமாக ஆதரிக்கும் மாவட்டமாக இருந்து வந்தது.கால் நுாற்றாண்டு காலமாக நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும், அ.தி.மு.க.,வே அதிகளவு தொகுதிகளில் வென்றுள்ளது.திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படும் முன் நடந்த, 2006 சட்டமன்றத் தேர்தலில், 14 தொகுதிகளில் 10 தொகுதிகளை வென்ற அ.தி.மு.க., 2011 தேர்தலில் திருப்பூர் பிரிக்கப்பட்ட பின், கோவையில் இடம் பெற்ற 10 தொகுதிகளையும் மொத்தமாக வென்றது.

கடந்த, 2016 தேர்தலில் பத்தில் ஒன்பது தொகுதிகளை ஜெயித்தது. ஆனால், அவர் மறைந்த பின் நடந்த, 2019 லோக்சபா தேர்தலில், கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க., படுதோல்வியைச் சந்தித்தது.ஜெயலலிதா இல்லாத காரணத்தால், இனி அ.தி.மு.க., வெல்ல முடியாது என்று பேச்சு எழுந்தது. இதற்கேற்ப பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில், தி.மு.க., வெல்லும் என்று கூறப்பட்டது.ஆனால், அதை யெல்லாம் முறியடித்து, கோவையில் அனைத்துத் தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டத்திலும் எட்டுக்கு ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றுள்ளது.மலை மாவட்டமான நீலகிரியில், கடந்த முறையைப் போலவே மூன்றில் ஒரு தொகுதியை மட்டும் அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.கடந்த முறை குன்னுாரை வென்றதற்குப் பதிலாக, இந்த முறை தி.மு.க.,வின் கோட்டை என்று கருதப்பட்ட கூடலுார் தொகுதியை வென்று சாதனை படைத்துள்ளது.ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் பெரும்பான்மையான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக, கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X