அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவிநாசியை தக்க வைத்த அ.தி.மு.க., சபாநாயகர் தனபால் வெற்றி

Added : மே 02, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., வின் கோட்டை எனப்படும் அவிநாசியில், அக்கட்சிக்கு நேரடி போட்டி தரக்கூடிய கட்சியாக தி.மு.க., மட்டுமே இருந்தது. இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவைக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் தலைவர் அதியமான் ராஜு களமிறங்கினார். அ.தி.மு.க., சார்பில் 'சிட்டிங்'

அவிநாசி : அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., வின் கோட்டை எனப்படும் அவிநாசியில், அக்கட்சிக்கு நேரடி போட்டி தரக்கூடிய கட்சியாக தி.மு.க., மட்டுமே இருந்தது.

இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவைக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் தலைவர் அதியமான் ராஜு களமிறங்கினார். அ.தி.மு.க., சார்பில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தனபால் களமிறங்கினார்.அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், அவிநாசி அரசு கலைக்கல்லூரி, கிராம சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன. 51,161 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் வெற்றி பெற்றார். இதன்மூலம், அவிநாசி தொகுதி, அ.தி.மு.க.,வின் கோட்டை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X