சுற்றுக்கு சுற்று ஓட்டு வித்தியாசம் தி.மு.க., - அ.தி.மு.க., திக்... திக்...| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுற்றுக்கு சுற்று ஓட்டு வித்தியாசம் தி.மு.க., - அ.தி.மு.க., திக்... திக்...

Added : மே 02, 2021
Share
கோவை : மேட்டுப்பாளையம் தொகுதியில், சுற்றுக்கு சுற்று ஓட்டு வித்தியாசம் மாறியதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பதைபதைப்புடன் காணப்பட்டனர். மேட்டுப்பாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.பி., செல்வராஜ், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிட்டனர். இவ்விருவருக்கே போட்டி கடுமையாக இருந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், எட்டில் அ.தி.மு.க., முன்னிலையில்

கோவை : மேட்டுப்பாளையம் தொகுதியில், சுற்றுக்கு சுற்று ஓட்டு வித்தியாசம் மாறியதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பதைபதைப்புடன் காணப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.பி., செல்வராஜ், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிட்டனர். இவ்விருவருக்கே போட்டி கடுமையாக இருந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், எட்டில் அ.தி.மு.க., முன்னிலையில் இருந்தது. தெற்கு தொகுதியில் கமல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். மேட்டுப்பாளையம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் முன்னனியில் இருந்ததால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர். தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே, 11வது சுற்றில், 266 ஓட்டுகளே வித்தியாசம் இருந்தது. 12வது சுற்றில், 230 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், முன்னிலை பெற்றார்.

17வது சுற்று வரை, அ.தி.மு.க., வேட்பாளரே, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னேறி வந்தார். 18வது சுற்றில், 33 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் மீண்டும் முன்னிலை பெற்றார்.இதனால், இரு கட்சியினருக்கும் இடையே மீண்டும் பதைபதைப்பு ஏற்பட்டது. 19வது சுற்றில், 940 ஓட்டுகள் கூடுதல் பெற்று, அ.தி.மு.க., செல்வராஜ் முன்னிலை வகித்தார். சுற்றுக்கு சுற்று நிலைமை மாறியதால், கட்சியினர் சோகத்துடன் காணப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X