சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமங்கலத்தில் ஓட்டு எண்ணிக்கை நான்கரை மணி நேரம் நிறுத்தம்

Added : மே 03, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் ஓட்டுகளை எண்ணும் போது இ.வி.எம்., மெஷினின் 134 எண்ணும், அதில் ஒட்டப்பட்டிருந்த 132 ஸ்டிக்கர் எண்ணும் வேறுபடுவதாக கூறிய தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணுவதை தடுத்து நிறுத்தினர். புகார் ஆதாரமற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதை அடுத்து 4 மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான ஓட்டு

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் ஓட்டுகளை எண்ணும் போது இ.வி.எம்., மெஷினின் 134 எண்ணும், அதில் ஒட்டப்பட்டிருந்த 132 ஸ்டிக்கர் எண்ணும் வேறுபடுவதாக கூறிய தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணுவதை தடுத்து நிறுத்தினர்.

புகார் ஆதாரமற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதை அடுத்து 4 மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது. திருமங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் உதயகுமார், தி.மு.க., சார்பில் மணிமாறன் போட்டியிட்டனர். தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின் 14 வது சுற்றின் போது இ.வி.எம். 134 வது எண் மெஷின் எண்ணுவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் பெட்டியின் ஓரத்தில் எண் 132 என இருந்ததால் பெட்டியை மாற்றி விட்டதாக தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர்.

முகவர்கள் இருந்த தடுப்புகளின் மீது மோதினர். போலீசார் சமரசம் செய்ததை ஏற்கவில்லை. திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா சமரசம் செய்தபோது நீங்களும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா என கத்தினர். வேறு தேர்தல் நடத்தும் அலுவலரை வைத்து ஓட்டு எண்ண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் மதியம் 2:30 மணிக்கு ஓட்டு எண்ணுவது நிறுத்தப்பட்டது. கலெக்டர் அன்பழகன், தேர்தல் பார்வையாளர் ராம் விகார் நேரில் வந்து இ.வி.எம்., மெஷின் எண் சரியாக இருப்பதாக தெரிவித்தனர்.

தி.மு.க.,வினர் மறு தேர்தல் நடத்தக் கோரியதை மறுத்தனர். இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக் கோரினர். இதனை தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர்.இதுகுறித்து தி.மு.க., வின் திருமங்கலம் வேட்பாளரின் முகவர் தங்கேஸ்வரன் மற்ற கட்சி முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா அறிக்கை அனுப்பினார். அதில்,''ஓட்டுப்பதிவு முடிந்தபின் 134வது இ.வி.எம். மிஷினில் பதிவான ஓட்டுகள் சரிபார்க்கப்பட்டு ஆட்சேபனை இன்றி ஓட்டுச்சாவடி முகவர்கள் 17 பி படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி மிஷினிலும் 17 பி படிவத்திலும் ஓட்டு எண்ணிக்கை 883 என சரியாக உள்ளதால் மெஷின் மாறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே இந்த புகார் ஏற்கக்கூடியதல்ல. ஓட்டு எண்ணிக்கைக்கு தடையில்லை' என்று தெரிவித்திருந்தார். நான்கரை மணி நேரம் கழித்து மீண்டும் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.பதட்டத்தை தணிக்க கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் வந்தார். போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X