அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிட்டிங்' எம்.எல்.ஏ., வீழ்ச்சி சிங்கை தி.மு.க.,வினர் கவலை

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை : கோவை சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திக், முதல் சுற்றில் இருந்தே பின்தங்கியதால், தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகினர். கடந்த, 2016 தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், சிங்காநல்லுார் தொகுதியில் மட்டும், தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ., கார்த்திக், குடிநீர், பாலம், ரோடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, கடந்த, 5 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை

கோவை : கோவை சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திக், முதல் சுற்றில் இருந்தே பின்தங்கியதால், தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகினர்.

கடந்த, 2016 தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், சிங்காநல்லுார் தொகுதியில் மட்டும், தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ., கார்த்திக், குடிநீர், பாலம், ரோடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, கடந்த, 5 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, அ.தி.மு.க., அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்து வந்தார். இம்முறை, அவரை தோற்கடிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் கங்கணம் கட்டி வேலை செய்தனர்.

இம்முறை, மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சி துணை தலைவர் மகேந்திரன் நிறுத்தப் பட்டதால், சிங்காநல்லுார் தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டது. முதல் சுற்றிலேயே, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமன், 2,620 ஓட்டுகள் பெற்று, 1,132 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.தொடர்ச்சியாக, அ.தி.மு.க., முன்னிலை வகித்ததால், நான்காவது சுற்று எண்ணி முடித்ததும், ஓட்டு எண்ணும் அறையில் இருந்து, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் வெளியேறினார்.ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க., வேட்பாளரே முன்னிலை வகித்து வந்தார். 11வது சுற்றில், 7,328 ஓட்டுகளும், 21வது சுற்றில், 14,641 ஓட்டுகளும் வித்தியாசம் ஏற்பட்டதால், தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர். 29வது சுற்றில், 11,908 ஓட்டுகள் அதிகமாக பெற்று, அ.தி.மு.க., ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X