அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கோட்டையை தகர்த்த அ.தி.மு.க.,

Added : மே 03, 2021
Share
Advertisement
கூடலுார் : தி.மு.க., கோட்டையாக இருந்த கூடலுார் தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றியது. நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில், 2006 முதல், தொடர்ச்சியாக தி.மு.க., வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், அந்த 'இமேஜை' மாற்ற அ.தி.மு.க., வியூகம் வகுத்தது. முதற்கட்டமாக, தாயகம் திரும்பிய சமூகத்தை சேர்ந்த வக்கீல் பொன் ஜெயசீலனை, வேட்பாளராக நிறுத்தியது.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., திராவிடமணி, உள்ளிட்ட

கூடலுார் : தி.மு.க., கோட்டையாக இருந்த கூடலுார் தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றியது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில், 2006 முதல், தொடர்ச்சியாக தி.மு.க., வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், அந்த 'இமேஜை' மாற்ற அ.தி.மு.க., வியூகம் வகுத்தது. முதற்கட்டமாக, தாயகம் திரும்பிய சமூகத்தை சேர்ந்த வக்கீல் பொன் ஜெயசீலனை, வேட்பாளராக நிறுத்தியது.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., திராவிடமணி, உள்ளிட்ட பலரும், 'சீட்' கேட்டு எதிர்பார்த்த நிலையில், நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கத்துக்கு 'சீட்' வழங்கபட்டது. அவருக்கு கட்சியினர் மத்தியில் ஆதரவு குறைவாக தான் இருந்தது. குன்னுார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக்கை, சமாதானப்படுத்தவே, அவரது ஆதரவாளரான காசிலிங்கத்திற்கு 'சீட்' வழங்கப்பட்டதாக, வெளிப் படையாக கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க.,வுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தி.மு.க., வினர் திணறினர். திட்டமிட்ட தேர்தல் பணி காரணமாக, 15 ஆண்டுகளுக்கு பின் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் வெற்றி வாகை சூடியுள்ளார்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றினாலும், அதன் கோட்டையாக கருதப்பட்ட கூடலுாரில், 'கோட்டை' விட்டது, மலை மாவட்ட தி.மு.க.,விரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X