அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உண்மையாக இருப்பேன்; மக்களுக்காக உழைப்பேன்'

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (9+ 43)
Share
Advertisement
சென்னை : 'மக்களுக்காக, உண்மையாக உழைப்பேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார், நம்மை உருவாக்கிய அண்ணாதுரை. 'ஜனநாயகத்தில், ஜனங்களே எஜமானர்' என்றார், நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய கருணாநிதி.தமிழ் மொழிக்கும், இனத்திற்கும், நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட தி.மு.க.,விற்கு, ஆறாவது முறை
 'உண்மையாக , மக்களுக்காக , ஸ்டாலின்

சென்னை : 'மக்களுக்காக, உண்மையாக உழைப்பேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார், நம்மை உருவாக்கிய அண்ணாதுரை. 'ஜனநாயகத்தில், ஜனங்களே எஜமானர்' என்றார், நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய கருணாநிதி.
தமிழ் மொழிக்கும், இனத்திற்கும், நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட தி.மு.க.,விற்கு, ஆறாவது முறை வாய்ப்பளித்த, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.தி.மு.க.,விடம் தமிழகத்தை ஒப்படைத்தால், நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பர் என்பதை உணர்ந்து, மக்கள் தங்களது மகத்தான ஆதரவை வழங்கி உள்ளனர்.
ஐந்து முறை ஆட்சி செலுத்திய கருணாநிதி வாழ்ந்த காலத்திலேயே, தி.மு.க., ஆட்சியை மலர வைக்க வேண்டும் என, நினைத்தோம்.

ஆனால், காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன், ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம்.அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீ காரம் தான், மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றி. எத்தனை சோதனைகள், வேதனைகள், பழிச் சொற்கள், அவதுாறுகள் என, கட்சியின் மீது வீசப்பட்ட அனைத்தையும், தங்களது ஓட்டுகளால் ஓரங்கட்டிய, மொத்த மக்களுக்கும் நன்றி.மக்களுக்கு உண்மையாக இருப்பேன்; உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும் செயலும், இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

தமிழகத்தில் அமையப் போகும் ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என, நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சி.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - kailasapuram,இந்தியா
08-மே-202112:13:59 IST Report Abuse
Indian நீங்கள் சொல்வது எல்லாம் செயலில் இருந்தால் ...மக்களும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பர் ..
Rate this:
Cancel
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
08-மே-202106:42:50 IST Report Abuse
Sowmya Sundararajan எதுவும் நடந்தால் மட்டுமே உண்மை . பார்க்க தானே போகிறோம் . ரிவ்யூ மீட்டிங் எல்லாம் பிறகு வைத்துக்கொள்வோம் .
Rate this:
Cancel
chandran - madurai,இந்தியா
06-மே-202120:03:32 IST Report Abuse
chandran அய்யா ஸ்டாலின் அவர்களே, நீங்க சொன்ன வரைக்கும் சந்தோஷம். அப்படியே மக்களின் நலனில் அக்கறை வைத்து ஊழல் செய்யாமல், நல்ல காரியங்களை செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X