சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
பல்லடம் : கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.மாணவர்களின் கல்வி ஒருபுறம் பாதித்து வர, தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக, ஆசிரியர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பல்லடம் : கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.மாணவர்களின் கல்வி ஒருபுறம் பாதித்து வர, தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக, ஆசிரியர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பள குறைப்பு நடவடிக்கையால், வருவாய் இழந்த ஆசிரியர்கள் பலர், வேறு வேலைகளுக்கு செல்வதும் நடக்கிறது. மாற்று வேலைக்கு செல்ல விரும்பாத ஆசிரியர்கள் பலர், எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று பள்ளிகளை தேடி செல்லும் நிலையும் உள்ளது.தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசு பல்வேறு வகையில் உதவி வரும் சூழலில், கல்வி பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது வருத்தமளிக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X