அரசியல் செய்தி

தமிழ்நாடு

அளவளாவல்... குழப்பம்!

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஓட்டு எண்ணிக்கை மையத்தில், எதிரெதிர் வேட்பாளர்கள் சந்தித்தது, ஓட்டு எண்ணிக்கையில் குழப்பம் உட்பட பல்வேறு காட்சிகளை காண முடிந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை, 6:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் வேட்பாளர், ஏஜன்ட்களை சோதனை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.போலீசார்

திருப்பூர் : ஓட்டு எண்ணிக்கை மையத்தில், எதிரெதிர் வேட்பாளர்கள் சந்தித்தது, ஓட்டு எண்ணிக்கையில் குழப்பம் உட்பட பல்வேறு காட்சிகளை காண முடிந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை, 6:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் வேட்பாளர், ஏஜன்ட்களை சோதனை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மைக்கில் தொடர்ந்து அறிவிப்பும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு பணி குறித்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணுமிடத்திலும் தனித்தனியே சாமியானா அமைக்கப்பட்டு வேட்பாளர், ஏஜன்ட் அமர இருக்கை போடப்பட்டிருந்தது.

காலை, 7:30 க்கு அனைவருக்கும் டிபன் வழங்கப்பட்டது. காலை சரியாக, 8:00 மணிக்கு 'ஸ்டராங் ரூம்' திறக்கப்பட்டு, வேட்பாளர், முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தொகுதிக்கு, 14 டேபிள் போடப்பட்டு, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.ஒரு சுற்றின் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் ஓட்டு இயந்திரங்கள் மற்றொரு அறையில் வைக்கப்பட்டது. பிற தொகுதிக்கான தபால் ஓட்டுக்கள், இரண்டு மணி நேரத்தில் எண்ணப்பட்ட நிலையில், அவிநாசியில் தொகுதியில் தபால் ஓட்டுகள், மாலை, 5:00 மணி வரை எண்ணி முடிக்கப்படாமல் இருந்தது.மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் காலை, 8:00 மணிக்கு ஒட்டு எண்ணுமிடத்துக்கு வந்து விட்டார். அவிநாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் சாமியானா பந்தலில் இருக்கை போட்டு அமர்ந்தவர்; அங்கேயே மதிய உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு, மாலை வரை அமர்ந்திருந்தார்.தெற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன் - தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் இருவரும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அமர்ந்து சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர்.ஓட்டு எண்ணும்போது, முன்னிலை, பின்னிலை, ஓட்டு வித்தியாசத்தில் திடீர் திருப்பம் போன்றவற்றால், வேட்பாளர்களின் மன நிலை, நிமிடத்துக்கு நிமிடம் மாறியது.அறிவிப்பில் தாமதம்ஒவ்வொரு சுற்று முடிவின் ஓட்டு எண்ணிக்கை விபரங்களை உடனுக்குடன் அறிய பத்திரிகையாளர் மையத்தில் இரண்டு 'டிவி' வைக்கப்பட்டது. சில நிமிடம் மட்டுமே ஓடி பழுதாகியது. மற்ற தொகுதிகளில் ஐந்தாவது, ஏழாவது சுற்று முடிவு வெளிவந்த நிலையில், காங்கயம் தொகுதியில் மூன்றாவது சுற்று நிலவரமே தாமதமாக தெரிவிக்கப்பட்டது.இரண்டாவது சுற்று முடிவில் காங்கயம் தொகுதிக்கான ஓட்டுஇயந்திரம் 'மக்கர்' செய்ததால், எண்ணிக்கை தாமதமாகியது.தாராபுரம் தொகுதி நிலவரத்தின் ஐந்து சுற்று தெரிவிக்கப்பட்டது; அடுத்தடுத்த சுற்று விபரம் தெரிவிக்காமல், இரண்டு மணி நேரத்துக்கு பின், 14வது சுற்று முடிவை அறிவித்தனர். இதனால், குழப்பம் ஏற்பட்டது.மொத்தத்தில் ஓட்டு எண்ணிக்கை வைபவம் ஒரு வழியாக, இரவு, 10:00 மணிக்கு மேலும் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X