பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களை காக்கும் ஆயுதம்!

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : தடுப்பூசி போட்டு கொண்டால், கொரோனா அச்சமின்றி இருக்கலாம் என, திருப்பூர் தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி: கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளேன்; வரும் 10ம் தேதி, இரண்டாவது டோஸ் போட உள்ளேன். தடுப்பூசியால், எனக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. தற்போதைய சூழலில்,

திருப்பூர் : தடுப்பூசி போட்டு கொண்டால், கொரோனா அச்சமின்றி இருக்கலாம் என, திருப்பூர் தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி: கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளேன்; வரும் 10ம் தேதி, இரண்டாவது டோஸ் போட உள்ளேன். தடுப்பூசியால், எனக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. தற்போதைய சூழலில், நமக்கான பாதுகாப்பு கவசம், தடுப்பூசி மட்டும்தான்.திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், தொழிலாளர், தொழிலாளர் குடும்பத்தினர் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும்.

உறவினர், நண்பர்கள் அனைவரையும், தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் (சிம்கா) சங்க தலைவர் விவேகானந்தன்: தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. ஒருவேளை கொரோனா தாக்கினாலும்கூட, ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தால், எளிதாக தொற்றிலிருந்து மீண்டுவிட முடியும்.எங்கள் நிறுவனத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 300 தொழிலாளருக்கு, தடுப்பூசி போட புக்கிங் செய்துள்ளோம்.

'சிம்கா' சங்கத்தில் உறுப்பினராக அனைத்து நிட்டிங் நிறுவனங்களுக்கும், தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்து ரத்தினம்:கடந்த 2020ல், கொரோனா பரவலின்போது, எவ்வித தடுப்பு மருந்துகளும் இல்லை. ஆனால் தற்போது, மனித குலத்தை பாதுகாக்கும் மகத்தான மருந்தாக, கோவேக்ஸின், கோவிட் ஷீல்டு என்கிற இரண்டு தடுப்பூசிகள் உள்ளன.எவ்வித தயக்கமும் இன்றி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். நான், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன்;

இரண்டாவது டோஸூக்காக காத்திருக்கிறேன். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு, தொழிலாளரே ஆணிவேராக உள்ளனர். நிறுவனங்கள், தங்கள் சொந்த செலவில், தொழிலாளருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவேண்டும்.திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:தடுப்பூசி குறித்த தேவையற்ற பயத்தை மக்கள் தவிர்க்கவேண்டும். நாட்டின் அனைத்து தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அரசு, மக்களை மிகச்சரியாக வழிநடத்திச் செல்கிறது. சின்னம்மை, பெரியம்மை போன்று, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனாவையும் ஒழிக்கவேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத் தக்கது. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், எங்கள் நிறுவன தொழிலாளர்கள், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X