பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டாட்டமும் இல்லை திண்டாட்டமும் இல்லை

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் இல்லாததால், போலீசுக்கு திண்டாட்டமும் இல்லாமல் போனது.ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, போலீசார் அதிகளவில், முக்கிய இடங்களில், நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கான அவசியம் இல்லாமல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் இல்லாததால், போலீசுக்கு திண்டாட்டமும் இல்லாமல் போனது.ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, போலீசார் அதிகளவில், முக்கிய இடங்களில், நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. காரணம், சட்டசபை தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்கு பொதுமக்கள் காட்டிய அதீத ஆர்வம்தான். 'டிவி', இணையதளம் வாயிலாக, முடிவுகளை அறிந்துகொண்டனர்.இதனால், சாலைகளில், அவசியமின்றி, யாரும் நடமாடவில்லை; சாலைகள் வெறிச்சோடியிருந்தன.தாங்கள் சார்ந்த மற்றும் விரும்பும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஆரவாரத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் ஈடுபடுவது வழக்கம்; பட்டாசு வெடித்து மகிழ்வதுண்டு.

ஊரடங்கால், இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. தலைவர்களும், 'வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என அறிவுறுத்தியிருந்தனர்.ஓட்டு எண்ணும் மையம் முன்பும், கூட்டம் திரளாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாததால், கொரோனா பரவல் என்ற அச்சத்திற்கு இடம் இல்லாமல் போனது; இதனால், கட்சியினரை அடக்க வேண்டிய திண்டாட்டமும் இல்லை என்பதால் போலீசார் மகிழ்ச்சிஅடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X