சம்பவம் செய்தி

தமிழ்நாடு

382 பேருக்கு தொற்று உறுதி 412 பேர் குணமடைந்தனர்

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். திருப்பூர் மாவட்டத்தில், 382 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது; இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை, 27 ஆயிரத்து, 230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று, 412 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, இதுவரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில், 382 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது; இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை, 27 ஆயிரத்து, 230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று, 412 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, இதுவரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள், 23 ஆயிரத்து, 855 பேர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில், 3,134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 58 வயது பெண், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 78 வயது ஆண் என இருவர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினார்.

இரு தினங்களாக பலி எண்ணிக்கை இல்லாததால், சுகாதாரத்துறையினர் சற்று நிம்மதி அடைந்திருந்தனர்.மாவட்டத்தில், இதுவரை, 241 பேர் தொற்று பாதித்து இறந்துள்ளனர். ஆனால், நேற்று ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது, கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X