பொது செய்தி

தமிழ்நாடு

சத்தம் இல்லா யுத்தம்! முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த மக்கள்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று, இரண்டாவது வாரமாக, முழு ஊரடங்கு தினத்தை, முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்தனர். கொரோனா பரவலால், இரண்டாவது வாரமாக, ஞாயிறு தினமான நேற்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், முழு ஊரடங்கை, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை
 சத்தம் இல்லா யுத்தம்!  முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த மக்கள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று, இரண்டாவது வாரமாக, முழு ஊரடங்கு தினத்தை, முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்தனர்.

கொரோனா பரவலால், இரண்டாவது வாரமாக, ஞாயிறு தினமான நேற்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், முழு ஊரடங்கை, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை தினமாகவும் இருந்ததால், கண்காணிப்பு கூடுதலாக்கப்பட்டது.கடந்த வாரம், ஞாயிறு தினத்தின்போது, முழு ஊரடங்கை முழுமையாக விதிமுறைகளைப் பின்பற்றி, வீட்டை விட்டு வெளியேறாமல், கடைபிடித்ததை போன்றே, நேற்றும், பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர்.பால் வினியோகம் தடைபடாமல் நடந்தது;

பெட்ரோல் பங்க்குகள், மருந்துக்கடைகள் திறந்திருந்தன. இருப்பினும், கூட்டமின்றி இவை காணப்பட்டன.திருப்பூரில் தேர்தல் முடிவுகளை அறிவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால், வீதிகளும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பல்லடம், காங்கயம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி, பெருமாநல்லுார் உட்பட திருப்பூரில் உள்ள பிரதான சாலைகள் முழுமையாக ஆள் அரவமின்றி காணப்பட்டது.மே தினத்தையொட்டி, சனிக்கிழமை விடுமுறையாக இருந்ததால், வெளி மாவட்ட தொழிலாளர் பலர் வெளியூர் சென்றிருந்தனர். கடந்த இரு தினங்களாக, தொழிற்சாலைகளும் பெருமளவு இயங்காததால், ஊரடங்கு நுாறு சதவீதம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.பல்லடம், அவிநாசி, வெள்ளகோவில், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட இடங்களிலும், ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

போலீசார் கூறுகையில், 'கடந்த ஆண்டு கொரோனா தந்த படிப்பினையை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளது.அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். இருப்பினும், சிலர் மட்டும், ஊரடங்கு நேரத்திலும் சுற்றித்திரிவதை பொழுது போக்காக கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தான் அபராதம் விதிக்கிறோம்; வழக்கும் பதிவு செய்கிறோம். இவர்கள் திருந்தினால், போலீசாருக்கு, கண்காணிக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது' என்றனர்.'நுாறு சதவீதத்தினரும் தடுப்பூசி போடும் வரை, அரசின் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிப்போம்' என்றனர் பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X