பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவில் மூழ்கிய மக்கள்

Added : மே 03, 2021
Share
Advertisement
பல்லடம் : இரண்டாவது வாரமாக ஞாயிறு தினமான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் நேற்று நடந்தது.தேர்தல் முடிவு வெளியாவதால், ஊரடங்கு பாதிக்கப்படுமா என்ற எண்ணத்தில், பல்லடம் போலீசார் தொடர் வாகன சோதனையிலும், முக்கிய பகுதிகளில் ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கு நாளில், தேர்தல் முடிவுகள் வெளியானதால்,

பல்லடம் : இரண்டாவது வாரமாக ஞாயிறு தினமான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் நேற்று நடந்தது.தேர்தல் முடிவு வெளியாவதால், ஊரடங்கு பாதிக்கப்படுமா என்ற எண்ணத்தில், பல்லடம் போலீசார் தொடர் வாகன சோதனையிலும், முக்கிய பகுதிகளில் ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கு நாளில், தேர்தல் முடிவுகள் வெளியானதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர்.நேற்று முழுவதும், தொலைக்காட்சி, மொபைல் போன்களுக்கு பொதுமக்கள் கட்டுப்பட்டிருந்தனர்.

பல்லடத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல், ஊரடங்கு அமைதியாக கடைபிடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X