அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஸ்டாலின் மரியாதை

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி நினைவிடம் சென்று, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,580 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை, லயோலா கல்லூரிக்கு
TN election results, MK Stalin, Election Results 2021

சென்னை: கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி நினைவிடம் சென்று, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,580 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை, லயோலா கல்லூரிக்கு நேரில் சென்று ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து வணங்கினார்.


வாக்குறுதி நிறைவேற்றப்படும்


பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: 10 ஆண்டு காலமாக தமிழகம் பாதாளத்திற்கு சென்றிருக்கிறது என்பதை அறிந்த மக்கள், திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில், எங்களுக்கு ஓட்டளித்து மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கின்றனர். அவர்கள் எங்களை எதற்காக வெற்றி பெற வைத்திருக்கிறார்களோ, அதனை நிறைவேற்றுவோம். திமுக.,வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.


latest tamil news




எளிமையாக பதவியேற்பு விழா:


கருணாநிதியின் வழி நின்று, சிறப்பான ஆட்சியை தருவோம். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். திமுக.,வுக்கு ஓட்டளிக்காதவர்ககளுக்கும் சேர்த்து பணியாற்றுவோம். கொரோனா பரவல் காரணமாக கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVIKUMAR KANDASAMY - Wardha,இந்தியா
03-மே-202116:51:11 IST Report Abuse
RAVIKUMAR KANDASAMY தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். அருமை ஆனால் "நிறைவேற்றும் முயற்சியில்" உறுதியற்ற சொல் . இது தான் ஆரம்பம்
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-மே-202113:36:25 IST Report Abuse
Dr. Suriya இனி இந்த சமாதி அரசு செலவில் அதாவது மக்கள் வரி பணத்தில்...புதுப்பிக்க படும்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202101:23:25 IST Report Abuse
தமிழவேல் அப்படிதான் இருக்கும். நம்பர் ஒண்ணுக்கு செய்யும்போது இவனுவோ வாயை மூடிக்கிட்டு இருந்தப்போவே நினைச்சதுதான்....
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
03-மே-202112:37:24 IST Report Abuse
karupanasamy தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருக்கும் பொழுதே கழக கயவர்கள் அராஜகத்தை தொடங்கிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. பொதுமக்களே சிறு குறு தொழில்முனைவர்களே கையேந்தி பவன் முதல் ரெஸ்டாரண்ட் வரை நடத்தும் உணவக வியாபாரிகளே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு கேட்ட காலம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X