பொது செய்தி

தமிழ்நாடு

சங்கிலிப்பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்த சாய கழிவுநீர்

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூரில், சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. மாசுகட்டுப்பாடு வாரியத்தால், சிவப்பு நிற வகைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதால், இந்நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றக்கூடாது; முழுமையாக சுத்திகரிக்கவேண்டும் என்பது

திருப்பூர் : திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூரில், சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. மாசுகட்டுப்பாடு வாரியத்தால், சிவப்பு நிற வகைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதால், இந்நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றக்கூடாது; முழுமையாக சுத்திகரிக்கவேண்டும் என்பது விதிமுறை.திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், சங்கிலிப்பள்ளம் ஓடையில், நேற்று காலை முதல் மதியம் வரை, சிவப்பு நிறத்தில் ரசாயனம் மிக்க சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், வழக்கமான மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதை தெரிந்துகொண்டு, சாயக்கழிவுநீரை பட்ட பகலிலேயே சில நிறுவனத்தினர் திறந்துவிட்டுள்ளனர்.

சாக்கடை கழிவுநீருடன் சாயமும் சேர்ந்து, நொய்யலாற்றில் கலந்து, மாசுபடுத்தியது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும். சுத்திகரிக்காத கழிவுநீரை திறந்துவிடும் நிறுவனங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X