பொது செய்தி

தமிழ்நாடு

'ஆக்சிஜன் கேன்' புக்கிங் தடை

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஆக்சிஜன் கேன், லித்தியம் பேட்டரி போன்றவற்றை 'பார்சல் புக்கிங்' செய்ய தபால்துறை தடை விதித்துள்ளது. மத்திய தபால் துறை இணை இயக்குனர் அஜய்குமார், தபால் நிலையங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கை:லித்தியம் பேட்டரிகள், ஆக்சிஜன் கேன்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தபால்துறையால், 'ஸ்பீடு போஸ்ட்' பார்சல்களாக முன்பதிவு

திருப்பூர் : ஆக்சிஜன் கேன், லித்தியம் பேட்டரி போன்றவற்றை 'பார்சல் புக்கிங்' செய்ய தபால்துறை தடை விதித்துள்ளது.

மத்திய தபால் துறை இணை இயக்குனர் அஜய்குமார், தபால் நிலையங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கை:லித்தியம் பேட்டரிகள், ஆக்சிஜன் கேன்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தபால்துறையால், 'ஸ்பீடு போஸ்ட்' பார்சல்களாக முன்பதிவு செய்யப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றன.இது, கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்க கூடியவை. இதுகுறித்து விமான நிறுவனங்களால், தபால் இயக்குனரகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.முன்பதிவு செய்வதற்கு, முன்பு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள், தபால் நிலையங்களில், விதிவிலக்கு இல்லாமல் துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும்.

இந்திய விமான போக்குவரத்து சங்க விதிமுறையின்கீழ், தடைசெய்யப்பட்ட, வெடிபொருள், எரியக்கூடிய திரவ வாயு, திடப்பொருள், ஆக்சிஜனேற்ற பொருட்கள், நச்சு மற்றும் தொற்று பொருள், கதிரியக்க பொருள், கரிம பெராக்சைடு, லித்தியம் பேட்டரி, காந்த பொருள், ஆக்சிஜன் கேன், கல்நார், உலர் பனி, இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை முன்பதிவு செய்ய கூடாது. தபால் நிலையங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X