பொது செய்தி

இந்தியா

வெற்றி கொண்டாட்டங்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:தேர்தல் நடந்த மாநிலங்களில், விதிமீறி நடந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய, மாநில தலைமை செயலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், கடந்த மாதம் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், நேற்று

புதுடில்லி:தேர்தல் நடந்த மாநிலங்களில், விதிமீறி நடந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய, மாநில தலைமை செயலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், கடந்த மாதம் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த மாநிலங்களில், வெற்றிக் கொண்டாட்டங்கள் துவங்கின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, மக்கள் சாலைகளில் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: தேர்தல் நடந்த மாநிலங்களில், ஊரடங்கு விதிகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தது, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, இந்த ஐந்து மாநிலங்களிலும் விதிமீறி நடந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, தலைமை செயலர்களுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமீறல்கள் அரங்கேறிய பகுதியின் காவல் நிலைய அதிகாரியை இடைநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X