பொது செய்தி

இந்தியா

10 ஆயிரம் படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகள்

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அருகே, குறைந்த காலத்தில், 10 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கூடிய, தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடவடிக்கைஇது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,

புதுடில்லி:ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அருகே, குறைந்த காலத்தில், 10 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கூடிய, தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


நடவடிக்கை

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பிரதமரின் முதன்மை செயலர், கேபினட் செயலர், உள்துறை, சாலை போக்குவரத்து துறை செயலர்கள் உட்பட, பல்வேறு மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின், மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து, அவற்றை ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களாக மாற்றுவதற்கான முயற்சி யில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.மேலும் ஸ்டீல், பெட்ரோ கெமிகல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை, மருத்துவ சிகிச்சைக்களுக்கு திருப்பி விடவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில், நகரங்களுக்கு மிக அருகில் உள்ள பகுதிகள், மக்கள் தொகை அதிகமுள்ள இடங்கள், தேவை அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை கண்டறியும் பணியை அரசு துவக்கி உள்ளது.


ஆதரவு

இந்த தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே, 10 ஆயிரம் படுக்கை வசதிகள் உடைய, தற்காலிக கொரோனா மருத்துவமனை களை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே சோதனை முறையில், ஐந்து தற்காலிக மருத்துவமனைகள் இதுபோல செயல்படத் துவங்கியுள்ளன; அதில், எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும், இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும். இந்த தற்காலிக மருத்துவ மனைகளை அமைக்கும் திட்டத்துக்கு, மாநில அரசுகள் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X