உத்தரவை திரும்பப் பெற அரசு வேண்டுகோள்

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லிக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு முறையிட்டுஉள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடால், டில்லியில் கொரோனா

புதுடில்லி:டில்லிக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு முறையிட்டுஉள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடால், டில்லியில் கொரோனா நோயாளிகள் எட்டு பேர், சமீபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது: டில்லிக்கு, தினமும், 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்தது. எனவே, அதன்படி, 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, டில்லிக்கு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நிறைவேற்ற தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த உத்தரவை திரும்பப்பெறக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு முறையிட்டுள்ளது. நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

டில்லிக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஆக்சிஜன், மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப் படாமல் உள்ளது; அதுவே, உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு தீர்வு காண, மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இதற்கிடையே, டில்லிக்கு, ஆக்சிஜன் வினியோகம் செய்வது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, மத்திய அரசுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X