லோக்சபா, சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:கடந்த மாதம், இடைத்தேர்தல்களை சந்தித்த, மூன்று லோக்சபா தொகுதிகள், 12 சட்டசபை தொகுதிகளில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப் பட்டன.கடந்த மாதம், சட்டசபை தேர்தல்கள் நடந்த தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதோடு, இடைத்தேர்தல்களை சந்தித்த, மூன்று லோக்சபா தொகுதிகள், 12

புதுடில்லி:கடந்த மாதம், இடைத்தேர்தல்களை சந்தித்த, மூன்று லோக்சபா தொகுதிகள், 12 சட்டசபை தொகுதிகளில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

கடந்த மாதம், சட்டசபை தேர்தல்கள் நடந்த தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதோடு, இடைத்தேர்தல்களை சந்தித்த, மூன்று லோக்சபா தொகுதிகள், 12 சட்ட சபை தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.அதன்படி, கேரளாவின் மலப்புரம் லோக்சபா தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அப்துசமாத் சமதானி வெற்றிபெற்றுள்ளார்.

ஆந்திராவின் திருப்பதி லோக்சபா தொகுதியை, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் குருமூர்த்தி; கர்நாடகாவின் பெல்காம் லோக்சபா தொகுதியை, பா.ஜ., வேட்பாளர் மங்கள சுரேஷ் அங்காடி கைப்பற்றினர்.இதைத்தவிர, இடைத்தேர்தல்கள் நடந்த, 12 சட்டசபை தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கர்நாடகாவின் மாஸ்கி சட்டசபை தொகுதியை, காங்., கட்சியின் பசனகவுடா துர்விஹால்; பசவகல்யான் தொகுதியை, பா.ஜ., வேட்பாளர் ஷாரனு சலகர் கைப்பற்றினர்.குஜராத்தின் மோர்வா ஹதாப் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் நிமிஷா சுதர்; ஜார்க்கண்டின் மதுபூர் தொகுதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஹபிசுல் ஹசா. மத்திய பிரதேசத்தின் தாமோ தொகுதியில், காங்., கட்சியின் அஜய் குமார் தாண்டன்; மஹாராஷ்டிராவின் பந்தர்பூர் மங்கள்வேதா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சமதான் ஆத்தடேவும் வெற்றி பெற்றனர்.

ராஜஸ்தானின் சஹாரா சட்டசபை தொகுதியில், காங்., கட்சியின் காயத்ரி தேவி; சுஜன்கர் தொகுதியில், மனோஜ் மேக்வால்; ராஜசமந்த் தொகுதியில், பா.ஜ.,வின் தீப்தி மகேஷ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.மிசோரமின் செர்சிப் தொகுதியை, சோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் லால்டுஹோமா; தெலுங்கானாவின் நாகர்ஜுனா சாகர் சட்டசபை தொகுதியை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் நொமுலா பாகத். உத்தரகண்டின் சால்ட் சட்டசபை தொகுதியை, பா.ஜ., வின் மகேஷ் ஜீனா ஆகியோர் கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X