மே.வ., தேர்தல் துளிகள்| Dinamalar

மே.வ., தேர்தல் துளிகள்

Added : மே 03, 2021
Share
விலகினார் பிரசாந்த் கிஷோர்திரிணமுல் காங்., கட்சிக்காக, தேர்தல் பிரசார யுக்திகளை, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்தார். 'இந்தத் தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வென்றால், இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன்' என, அவர் சவால் விடுத்திருந்தார்.நேற்று மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர் கூறியதாவது:இந்தத்

விலகினார் பிரசாந்த் கிஷோர்

திரிணமுல் காங்., கட்சிக்காக, தேர்தல் பிரசார யுக்திகளை, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்தார். 'இந்தத் தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வென்றால், இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன்' என, அவர் சவால் விடுத்திருந்தார்.நேற்று மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர் கூறியதாவது:

இந்தத் தேர்தலில் திரிணமுல் காங்., மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது, எனக்கு நன்கு தெரியும். இந்த முடிவுகள், ஒரு பக்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக தோன்றும். ஆனால், உண்மையில் கடும் போட்டி நிலவியது.மேற்கு வங்கத்தில், பா.ஜ., மிகப் பெரும் சக்தியாக மாறியுள்ளது. பா.ஜ.,வுக்கு சாதகமாகவே, தேர்தல் கமிஷனும் செயல்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, இந்தத் தொழிலில் இருந்து விலகுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

குவிந்த வாழ்த்துக்கள்

மேற்கு வங்கத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள திரிணமுல் காங்., தலைவர், மம்தா பானர்ஜிக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, செய்தி வெளியிட்டுள்ளனர்.

கொண்டாட தடை

முன்னணி நிலவரம் வெளிவரத் துவங்கியதும், திரிணமுல் காங்., தொண்டர்கள், சாலைகளில் குவிந்து, பட்டாசுகள் வெடித்தும், வண்ணப் பொடிகளைத் துாவியும், 'டிரம்ஸ்' வாசித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா விதிகள் மீறப்பட்டதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநில நிர்வாகம் மற்றும் போலீசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டோரை விரட்டியடித்தனர். பல இடங்களில், போலீசாருடன், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மம்தாவுக்கு பா.ஜ., வாழ்த்து

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா கூறியதாவது:இந்த தேர்தலில், திரிணமுல் காங்., வென்றதற்கு, மம்தா பானர்ஜியே காரணம். மேற்கு வங்க மக்கள், மம்தா பானர்ஜியை தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்தத் தேர்தலில், பா.ஜ.,வின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்படும். எங்கு தவறு நடந்தது, கட்சி கட்டமைப்பில் பிரச்னையா என்பது குறித்து ஆராயப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X