சாதனை படைத்த இடதுசாரிகள் ஆட்சியை தக்க வைத்தார் பினராயி

Added : மே 03, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரள அரசியலில் இதுவரை இல்லாத விதமாக, ஆளும் கட்சி, ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, அபார வெற்றி பெற்றுஉள்ளது. கேரள அரசியல் வரலாற்றில், எந்த ஆளும் கட்சியும், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததே இல்லை. கடந்த, 1982ம் ஆண்டு முதல், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான
 சாதனை படைத்த இடதுசாரிகள் ஆட்சியை தக்க வைத்தார் பினராயி

திருவனந்தபுரம்:கேரள அரசியலில் இதுவரை இல்லாத விதமாக, ஆளும் கட்சி, ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, அபார வெற்றி பெற்றுஉள்ளது.

கேரள அரசியல் வரலாற்றில், எந்த ஆளும் கட்சியும், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததே இல்லை. கடந்த, 1982ம் ஆண்டு முதல், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன.

கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி தோல்விஅடைந்தது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்றார்.கடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், 19ல் காங்கிரஸ் கூட்டணியும், இடது ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. அதனால், சட்டசபை தேர்தலில் வழக்கம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கேரள சட்டசபைக்கு, கடந்த, 6ம் தேதி தேர்தல் நடந்தது. 74 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை நடந்தது. துவக்கம் முதலே, இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள், பெரும்பாலான தொகுதி களில் முன்னிலை பெற்றனர்.முடிவில், மொத்தம் உள்ள, 140 தொகுதிகளில், 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, இடது ஜனநாயக முன்னணி, ஆட்சியை தக்க வைத்து, வரலாற்று சாதனை படைத்தது.

கேரளாவில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த ஆளும் கட்சி என்ற வரலாற்று சாதனையை, இடது ஜனநாயக முன்னணி படைத்தது. காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி, 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தர்மாடம் தொகுதியில், முதல்வர் பினராயி விஜயன், 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கண்ணுார் மாவட்டம், மேட்டனுார் தொகுதியில், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர், காங்கிரசைச் சேர்ந்த உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில், 9,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி, 91 இடங்களிலும்; காங்., கூட்டணி, 47 இடங்களிலும்; பா.ஜ., மற்றும் சுயேச்சை, தலா, ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. உரப்பாணு எல்.டி.எப்.,உரப்பாணு எல்.டி.எப்., எனப்படும், எல்.டி.எப்., தான் உறுதி என்பது தான், கேரளாவில், இடது ஜனநாயக முன்னணியில் தேர்தல் கோஷமாக இருந்தது. முதல்வர் பினராயி விஜயன் தான், இந்த கோஷத்தை அறிமுகம் செய்தார்.

இப்போது, இந்த கோஷத்தை, மக்கள் உறுதி செய்துவிட்டனர். 'கொண்டாடுவதற்கான நேரமல்ல'இடது ஜனநாயக முன்னணிக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ள மக்களுக்கு நன்றி; இது, வெற்றியை கொண்டாடும் நேரமல்ல; கொரோனா வுக்கு எதிராக போராட வேண்டிய நேரம். பினராயி விஜயன், முதல்வர், மார்க்சிஸ்ட்இந்த தோல்வியை, நாங்கள் எதிர்பார்க்க வில்லை.

தோல்விக்கான காரணம் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பேன். இதற்கு முன்னும், காங்கிரஸ் இதுபோல் தோற்று உள்ளது; பின், வலிமையாக எழுந்துள்ளது.உம்மன் சாண்டி முன்னாள் முதல்வர், காங்கிரஸ் பெருந்தொற்று உள்ளிட்ட, மக்கள் சந்தித்த பல்வேறு சவால்களை சிறப்பாக கையாண்ட மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்த, கேரள மக்களுக்கு நன்றி. கொரோனாவை எதிர்கொள்வதில், உலகத்துக்கே முன்மாதிரியாக கேரளா உள்ளது.சீதாராம் யெச்சூரி, பொதுச் செயலர், மார்க்சிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X