கேரளா தேர்தல் துளிகள்

Added : மே 03, 2021
Share
Advertisement
வலிமையான தலைமை இல்லைசபரிமலை விவகாரம், தங்க கடத்தல் குற்றச்சாட்டு ஆகியவை, இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு எதிராக இருந்தும், காங்கிரஸ் கூட்டணியால், ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 'தென் மாநிலங்களில், பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் சக்தியாக, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியை முன்னிலைப்படுத்த வேண்டும்' என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுலின் எண்ணமும், நிறைவேறவில்லை.

வலிமையான தலைமை இல்லை

சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் குற்றச்சாட்டு ஆகியவை, இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு எதிராக இருந்தும், காங்கிரஸ் கூட்டணியால், ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 'தென் மாநிலங்களில், பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் சக்தியாக, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியை முன்னிலைப்படுத்த வேண்டும்' என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுலின் எண்ணமும், நிறைவேறவில்லை. இதற்கு, 'காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு, வலிமையான தலைமை இல்லாததே காரணம்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, கேரளாவில், காங்கிரஸ் தலைமைக்கு எதிரான குரல்கள், அதிகரிக்க துவங்கிவிட்டன.

வெற்றிக்கு உதவிய பா.ஜ.,

கேரளாவில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெற்று வந்தது. இந்த முறை, அந்த நடைமுறை மாறிவிட்டது.இந்த தேர்தலில், முன் எப்போதும் இல்லாத அளவில், பா.ஜ., தீவிரமாக பிரசாரம் செய்தது. 'பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் நோக்கில், காங்., கூட்டணிக்கு ஓட்டுப் போடாமல், இடதுசாரி கூட்டணிக்கு சிபான்மை மக்கள் ஓட்டளித்துள்ளனர்' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கேரள காங்கிரசால் லாபம்

சட்டசபைக்கு தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன், ஜோஸ் மாணி தலைமையிலான, கேரள காங்கிரஸ் - எம் - கட்சி, இடது ஜனநாயக முன்னணியில் சேர்ந்தது. கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த கட்சிக்கு, நல்ல செல்வாக்கு உள்ளது. இதுவும், இடது ஜனநாயக முன்னணியின் வெற்றிக்கு உதவியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X