அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து களத்தில் நிற்போம்: கமல் டுவிட்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற மக்கள் நீதி மய்யத்தின் கனவை காக்க, தொடர்ந்து களத்தில் நிற்போம் என அக்கட்சியின் தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ.,வின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி
Election Results 2021, Kamal, Kamal Haasan, MNM,

சென்னை: 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற மக்கள் நீதி மய்யத்தின் கனவை காக்க, தொடர்ந்து களத்தில் நிற்போம் என அக்கட்சியின் தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ.,வின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் முதல்வர் பதவியேற்க உள்ள ஸ்டாலினை வாழ்த்தி கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil newsதனது மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-மே-202116:25:38 IST Report Abuse
Malick Raja இன்னுமா முடியவில்லை.. எவ்வளவு அடித்தாலும் வடிவேலு கதைதானோ? பூட்டகேஸ்.. இனி ஒருக்காலும் தேறாது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-மே-202119:48:59 IST Report Abuse
Rajagopal அப்புடி ஓரமா போயி நில்லுங்க.
Rate this:
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
03-மே-202118:46:57 IST Report Abuse
Prem Kumar கூட்டணியின் மற்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் உள்ளிட்ட பலரும் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரத்திற்கு வந்தார்கள். ஆனால் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட கமல் மிக சக்தி வாய்ந்தவராகவும் பிரபலமானவராக இருந்ததாலும் வானதி வெற்றி பெறுவது கடினம் என அவர்களாகவே முடிவெடுத்து கொண்டு யாரும் பிரச்சாரத்திற்கு வராமல் ஒதுங்கி விட்டதை நாம் வருத்தத்துடன் ஒப்பு கொள்ள வேண்டும். ஆனாலும் மனசோர்வடையாமல், தான் இதுநாள் வரை செய்துவந்த பல்வேறு மக்கள் சமூக பணிகள் தனக்கு துணயாக இருக்கும் என்ற நம்பிக்கையில், உள்ளூர் தலைவர்கள் உதவியுடன் மட்டுமே தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X