பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கைக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி

Added : மே 03, 2021
Share
Advertisement
திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பத்து தொகுதிகளிலும், 164 பேர் போட்டியிட்டனர். கடந்த, 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில்,

திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பத்து தொகுதிகளிலும், 164 பேர் போட்டியிட்டனர். கடந்த, 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று எண்ணப்பட்டது. இதற்காக, வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர், அதிகாலை, 6:00 மணிக்கே குவிந்தனர். அனைவரையும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரி பார்த்து, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, காவல்துறையினர் அனுமதித்தனர்.மூன்று இடங்களில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை, 8:00 மணியளவில், தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பின், மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்களே முன்னணி வகித்தனர். இதனால், அ.தி.மு.க., முகவர்களும், வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதில், ஒரு சில வேட்பாளர்கள், மதியமே, ஓட்டு எண்ணும் இடத்தை விட்டு, வெளியில் சென்றனர்.ஓட்டு எண்ணும் பணியினை, தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் பொன்னையா, எஸ்.பி., அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர், பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.திருத்தணி: திருத்தணி சட்டசபை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, திருவள்ளூர் அடுத்த, பெருமாள்பட்டு தனியார் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யா முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.மொத்தம், 29 சுற்றுகள் எண்ணி, மாலை, 6:00 மணிக்கு முடிக்கப்பட்டது. பின், திடீரென தேர்தல் பார்வையாளர் வெங்கட்ட கவுடா திருத்தணி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்திற்கு நேரில் வந்து, ஓட்டு இயந்திரங்களை சரி பார்த்து ஆய்வு செய்தார்.சமூக இடைவெளி 'அம்போ'பெருமாள்பட்டு தனியார் கல்லுாரியில் நடந்த, ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர் மற்றும் முகவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அனைவரும், சமூக விலகல் கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாக நின்றனர்.மேலும், சுகாதார துறையினர் வழங்கிய, பாதுகாப்பு கவசம், முக கவசத்தைக்கூட அவர்கள் அணியவில்லை. இதனால், ஓட்டு எண்ணிக்கைக்கு வந்திருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X