அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது இடத்தில், 'விவசாயி'

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (36+ 21)
Share
Advertisement
இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை, நாம் தமிழர் கட்சின் சின்னமான, 'விவசாயி' கைப்பற்றி, வெகுஜன சின்னமாக மாறியுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால், 234 தொகுதிகளிலும், சரிசமமாக ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
மூன்றாவது இடம்,, 'விவசாயி'

இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை, நாம் தமிழர் கட்சின் சின்னமான, 'விவசாயி' கைப்பற்றி, வெகுஜன சின்னமாக மாறியுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால், 234 தொகுதிகளிலும், சரிசமமாக ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.



பலத்தை நிரூபித்தது.



நாம் தமிழர் கட்சியை துவக்கிய பின் சந்தித்த, 2016 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 1 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 4 சதவீதம் ஓட்டுகளை வாங்கி, கூடுதல் பலத்தை நிரூபித்தது. பின் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், 10.5 சதவீதம் ஓட்டுகளை வாங்கியது. தொடர்ந்து, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு, இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதால், அக்கட்சியின் விவசாயி சின்னம், வெகுஜன சின்னமாக மாறியுள்ளது.

இளைஞர்கள், இளம் பெண்கள், புது வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள், மூன்றாவது இடத்தை தக்க வைக்க உதவி செய்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு, மண் வளம் பாதுகாப்பு போன்ற கோட்பாடுகளை மையப்படுத்திய அக்கட்சியின் பிரசாரம், கிராமப்புற மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள், தி.மு.க.,விற்கு கிடைக்கவிடாமல், நாம் தமிழர் கட்சி பிரித்துள்ளதால், பல தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகளை பின்தள்ளி விட்டு, நாம் தமிழர் கட்சி, மூன்றாவது இடத்தை பிடித்து, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, இந்த தேர்தலில் தன்னை நிரூபித்துள்ளது.


தனித்து நின்றால் தெரியும்



இது குறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுகள், கூட்டணி சேராமல், பணம் கொடுக்காமல், திரை கவர்ச்சி இல்லாமல், ஊடக பலம் இல்லாமல், தனித்து நின்று பெற்ற ஓட்டுகள். அனைத்து கட்சிகளும் தனித்து நின்று பார்த்தால் தெரியும், நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு என்னவென்று' என, கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (36+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
04-மே-202112:49:19 IST Report Abuse
Jayvee வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் இவ்வளவு வோட்டு வாங்கிய உழவன்.. சுடலைக்கு எதிராக போட்டியிடாமல் பல கொடிகள் சம்பாதித்த சைமன் இந்த கட்சியின் ஜெனரல் மேனேஜர்.. அப்படின்னா இந்த கட்சியின் ஓனர் யாரு ?
Rate this:
Cancel
krishna_dharan - NJ,யூ.எஸ்.ஏ
03-மே-202121:09:15 IST Report Abuse
krishna_dharan யார்கிட்டயோ போட்டி வாங்கிட்டு film காமிக்கறான்.. எந்த அரசியல்வாதியா/ கிறிஸ்து பாவாடை இவனுக்கு பணம் கொடுக்கறான்னு கண்டு பிடிக்கவே முடியாது .. கொள்ளை அடிக்கும் DMK வெறியோட காத்திருக்கனுங்க.. தமிழ் மக்களுக்கு திராவிட சாராயத்தை ஊத்தி மயக்கத்திலே வச்சிருக்கணும்னு சாபக்கேடு
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
03-மே-202119:14:05 IST Report Abuse
S Bala இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.... தமிழர் என்று பறையடிப்பவர் ஏன் தமிழன் பழனிச்சாமியை எதிர்க்க வேண்டும்? வாசனும் ராமதாசும் கூட தமிழர்கள்தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X