அசாமில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்தது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அசாமில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்தது

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (3)
Share
கவுஹாத்தி :அசாமில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.அசாமின் 126 உறுப்பினர்களை உடைய சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.இதில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அசாம் கன பரிஷத் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி போடோலாந்து மக்கள்
அசாம், பா.ஜ., ஆட்சி, தக்கவைத்தது

கவுஹாத்தி :அசாமில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.அசாமின் 126 உறுப்பினர்களை உடைய சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.இதில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அசாம் கன பரிஷத் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி போடோலாந்து மக்கள் முன்னணி இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.


மகா கூட்டணி



ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. துவக்கம் முதலே பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணி முன்னிலை வகித்தது.
தனிப் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகள் தேவை என்ற நிலையில் நேற்றிரவு நிலவரப்படி பா.ஜ. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளன. இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமில் பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கிறது.காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. புதிதாக துவங்கப்பட்ட ராய்ஜோர் தள கட்சியின் தலைவர் அகில் கோகோய் சிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.


latest tamil news




வெற்றி வாகை


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர் தற்போது சிறையில் உள்ளார்.அதன் கூட்டணி கட்சியான அசாம் ஜாட்டியா பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.முதல்வர் சர்பானந்த சோனவால், சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, அசாம் கன பரிஷத் தலைவரும் அமைச்சருமான அதுல் போரா வெற்றி பெற்றனர்.


முன்னிலை


பா.ஜ. மாநில தலைவர் ரஞ்ஜீத் தாஸ், ராஜ்யசபா எம்.பி. பிஸ்வஜித் டெய்மாரி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.பா.ஜ.வை சேர்ந்த அமைச்சர் ரஞ்சித் தத்தா சுயேச்சை வேட்பாளர் ஜெயந்தா தத்தாவை விட 29 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அமைச்சர் கேசவ் மஹந்தா காங். வேட்பாளர் பிரசாந்தா குமார் சைக்கியாவை விட 28 ஆயிரத்து 720 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X