அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவிநாசி 'சென்டிமென்ட்' உடைத்தார் சபாநாயகர்

Added : மே 03, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி - தனி சட்டசபை தொகுதியில், ஒருமுறை ஜெயித்தவர் அடுத்த தேர்தலில் ஜெயித்தது இல்லை என்ற சென்டிமென்டை, சபாநாயகர் தனபால் முறியடித்தார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி-தனி தொகுதி, பெரும்பாலும் அ.தி.மு.க.,வின் கோட்டை என கூறப்படும். அக்கட்சிக்கு நேரடி போட்டி தரக்கூடிய கட்சியாக, தி.மு.க., மட்டுமே இருந்தது. இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவைக்கு
 அவிநாசி 'சென்டிமென்ட்' உடைத்தார் சபாநாயகர்

அவிநாசி:அவிநாசி - தனி சட்டசபை தொகுதியில், ஒருமுறை ஜெயித்தவர் அடுத்த தேர்தலில் ஜெயித்தது இல்லை என்ற சென்டிமென்டை, சபாநாயகர் தனபால் முறியடித்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி-தனி தொகுதி, பெரும்பாலும் அ.தி.மு.க.,வின் கோட்டை என கூறப்படும். அக்கட்சிக்கு நேரடி போட்டி தரக்கூடிய கட்சியாக, தி.மு.க., மட்டுமே இருந்தது. இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ஆதித்தமிழர் பேரவைக்கு தொகுதி ஒதுக்கப் பட்டு, அக்கட்சியின் தலைவர் அதியமான் ராஜு களமிறங்கினார். அ.தி.மு.க., சார்பில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான தனபால், மீண்டும் களமிறங்கினார்.

இத்தொகுதியில், ஒரு முறை ஜெயித்த வேட்பாளர், அடுத்த தேர்தலில் ஜெயிக்க மாட்டார் என்பது, 'சென்டிமென்ட்'.ஆயினும், அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், அவிநாசி அரசு கலைக் கல்லுாரி, கிராம சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன. இதனால், 51, ஆயிரத்து, 161 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், அவிநாசி தொகுதியில், இரண்டாவது முறை போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்ற சென்டிமென்டை அவர் உடைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X