தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: அமித் ஷா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: அமித் ஷா

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (23)
Share
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி, தமிழக வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும் என உறுதி அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பா.ஜ., கட்சி, போட்டியிட்ட 20 தொகுதிளில் 3ல் வெற்றி பெற்றிருக்கிறது. அக்கட்சியின் எல்.முருகன், அண்ணாமலை
Election Results 2021, Amit Shah, BJP

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி, தமிழக வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும் என உறுதி அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பா.ஜ., கட்சி, போட்டியிட்ட 20 தொகுதிளில் 3ல் வெற்றி பெற்றிருக்கிறது. அக்கட்சியின் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: ஐந்து ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X