அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்துாரில் இடைத்தேர்தல் இல்லை

Added : மே 03, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தோல்வி அடைந்ததால், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, இடைத்தேர்தலில் இருந்து தப்பியது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், மான்ராஜ், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளராக, மாதவராவ் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போதே, மாதவராவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்

ஸ்ரீவில்லிபுத்துார்:மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தோல்வி அடைந்ததால், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, இடைத்தேர்தலில் இருந்து தப்பியது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், மான்ராஜ், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளராக, மாதவராவ் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போதே, மாதவராவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்காக, அவரது மகளே தொகுதி முழுதும் சென்று பிரசாரம் செய்தார். தேர்தலில் கூட, அவர் ஓட்டு போடவில்லை.

ஓட்டுப்பதிவு முடிந்த ஒரு சில நாட்களில், மாதவராவ் காலமானார். இதனால், 'ஓட்டு எண்ணிக்கையில், மாதவராவ் ஜெயித்தால், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார். இதனால், இத்தொகுதி இடைத்தேர்தலில் இருந்து தப்பியது. மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட ஊராட்சி தலைவராக இருக்கிறார். கணவன், மனைவி இருவரும் முக்கிய பொறுப்பில் இருப்பது, விருதுநகர் மாவட்ட அரசியலில் இதுவே முதல் முறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X