அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.பெரியசாமி அமோக வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமி, 1.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலரான ஐ. பெரியசாமி, 1989ல் ஆத்துார் தொகுதியில், முதன் முறையாக வென்றார். 1991ல் தோல்வியடைந்தார்.
 ஐ.பெரியசாமி அமோக வெற்றி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமி, 1.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலரான ஐ. பெரியசாமி, 1989ல் ஆத்துார் தொகுதியில், முதன் முறையாக வென்றார். 1991ல் தோல்வியடைந்தார். மீண்டும், 1996ல் வென்றார். 2001ல் தோல்வியடைந்தார். அதன்பின், 2006, 2011, 2016ல் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். இம்முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு, 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 809 ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்த அ.தி.மு.க., கூட்டணி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, 30 ஆயிரத்து, 241 ஓட்டுகளே பெற்றார்.இருவருக்கும் வித்தியாசம், 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 568 ஓட்டுகள். இதனால் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் மற்றும் எதிர்த்து போட்டியிட்ட, 19 பேரையும், டிபாசிட் இழக்க வைத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X