அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதியை கைப்பற்றிய நத்தம் விஸ்வநாதன்

Added : மே 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த முறை தோல்வியடைந்த நத்தம் விஸ்வநாதன், இந்த முறை வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் ஆத்துார், பழநி, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய, நான்கு தொகுதிகளில், தி.மு.க.,வும், திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்துார் தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் வென்றன.தற்போது நடந்த தேர்தலிலும், தி.மு.க.,

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த முறை தோல்வியடைந்த நத்தம் விஸ்வநாதன், இந்த முறை வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் ஆத்துார், பழநி, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய, நான்கு தொகுதிகளில், தி.மு.க.,வும், திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்துார் தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் வென்றன.தற்போது நடந்த தேர்தலிலும், தி.மு.க., நான்கு தொகுதிகளை பெற்றுள்ளது.

அதே சமயம் கடந்த முறை வென்ற நத்தம் தொகுதியை இழந்தாலும், கடந்த முறை தோல்விஅடைந்த வேடசந்துாரை கைப்பற்றி, கணக்கை சமன் செய்து விட்டது.வாரிசு வெற்றிகடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் மாநில துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் முறையே ஆத்துார், பழநி தொகுதிகளில் வென்றனர். இம்முறையும் அதே தொகுதிகளில் போட்டியிட்ட தந்தையும், மகனும் வெற்றி பெற்று விட்டனர்.

கடந்த முறை திண்டுக்கல்லில் போட்டியிட்ட அ.தி.மு.க., அமைச்சர் சீனிவாசன், இம்முறையும் திண்டுக்கல்லில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டியை வென்று, தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கடந்த தேர்தலில் ஆத்துாரில் தி.மு.க.,வின் ஐ.பெரியசாமியை எதிர்த்து தோல்வி அடைந்தார். இம்முறை, சொந்த தொகுதியான நத்தத்தை கேட்டு பெற்ற அவர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலத்திடம் இருந்து, தொகுதியை கைப்பற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X