அரசியல் செய்தி

தமிழ்நாடு

5வது முறையாக ஜெயராமனுக்கு ஜெயம்

Added : மே 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட துணை சபாநாயகர் ஜெயராமன், வெற்றி பெற்றார்.கடந்த, 2001 முதல், தொடர்ந்து, 20 ஆண்டுகளாக பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வசம் உள்ளது. தற்போதும், அ.தி.மு.க., வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தொகுதியில், நான்காவது முறையாக, ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த, 2011 - 16ல் உடுமலை எம்.எல்.ஏ.,வாகவும் ஜெயராமன் இருந்தார். தற்போது,
 5வது முறையாக  ஜெயராமனுக்கு ஜெயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட துணை சபாநாயகர் ஜெயராமன், வெற்றி பெற்றார்.

கடந்த, 2001 முதல், தொடர்ந்து, 20 ஆண்டுகளாக பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வசம் உள்ளது. தற்போதும், அ.தி.மு.க., வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தொகுதியில், நான்காவது முறையாக, ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த, 2011 - 16ல் உடுமலை எம்.எல்.ஏ.,வாகவும் ஜெயராமன் இருந்தார். தற்போது, வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ., ஆகிறார்.

தி.மு.க.,வில் நிலவிய கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகளால், டாக்டர் வரதராஜன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.தி.மு.க., ஆட்சி அமைத்தாலும், பொள்ளாச்சி தொகுதி யில் வெற்றி பெற முடியாததால், சோகத்தில் உள்ளனர்.


பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் பெரியகருப்பன் 2006, 2011, 2016 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். தற்போதைய தேர்தலில், நான்காவது முறையாக வென்று, சாதனை படைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachimuthu - mettur,இந்தியா
04-மே-202117:15:10 IST Report Abuse
Nachimuthu தி முகவினரால் எத்தனை குற்ற சாட்டு கூறினாலும் மக்கள் அதனை புறம் தள்ளிவிட்டனர்
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
06-மே-202112:04:32 IST Report Abuse
Apposthalan samlinஅதே மாதிரி திமுக மீது சொல்லிய குற்ற சாட்டு களையும் மக்கள் புறம் தள்ளி திமுகவை ஜெயிக்க வைத்து விட்டனர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X