பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில கொள்முதல் நிறுத்தம் ஏலக்காய் விலையில் கடும் சரிவு

Added : மே 03, 2021
Share
Advertisement
கம்பம்:வடமாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக ஏலக்காய் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.கேரளா இடுக்கியில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறும். ஜனவரியில் ஏற்றுமதி முடிந்துவிட்டது. இந்தியாவில் டில்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,

கம்பம்:வடமாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக ஏலக்காய் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரளா இடுக்கியில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறும். ஜனவரியில் ஏற்றுமதி முடிந்துவிட்டது. இந்தியாவில் டில்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏலக்காய் அதிகமாக பயன்படுத்துவார்கள். கொரோனா பரவலால் வியாபாரிகள் ஏலக்காய் கொள்முதலை நிறுத்தி விட்டனர்.

மேலும் ஆப் சீசனில் விவசாயிகள் இருப்பு வைத்திருந்த காய்களை விலை கிடைக்கும் என ஏல மையங்களில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை விற்பனைக்கு வந்தது.ஏற்றுமதி நின்று போனதும், வடமாநில வியாபாரிகள் கொள்முதலை நிறுத்தியதும் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் கிலோ சராசரி விலை ரூ. 930 க்கு இறங்கியுள்ளது. சில மாதங்களில் கூட சராசரி விலை ரூ. ஆயிரத்து 600 வரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கோடையில் மழை பெய்திருப்பதால் வரும் சீசனில் சராசரிக்கு மேல் மகசூல் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X